இந்திய ரிசர்வ் வங்கியின் இரண்டு நாள் நாணய கொள்கை கூட்டம் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் முடிவுகளை அறிவிக்க உள்ளார்.
இக்கூட்டத்தில் இந்தியாவில் அதிகரித்து வரும் நுகர்வோர் பணவீக்கம் மற்றும் தொடர்ந்து சரிந்து வரும் ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்த முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
சமீபத்தில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் தன் நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 0.75 சதவீதம் வரையிலான பென்ச்மார்க் வட்டி விகிதத்தை அதிகரித்த நிலையில் ஒட்டுமொத்த முதலீட்டுச் சந்தையும் தலைகீழாக மாறியுள்ளது.
இந்த நிலையில் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நாணய கொள்கை குழு ரெப்போ விகிதத்தை 0.30 முதல் 0.50 சதவீதம் வரையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையிலான 6 பேர் கொண்ட நிதிக் கொள்கைக் குழுவின் (எம்பிசி) முடிவுகளை இன்று அறிவிக்கப்பட உள்ளது.
Sep 30, 2022, 4:00 pm IST
7 நாள் சரிவுக்கு பின்பு மீண்டது சென்செக்ஸ்
Sep 30, 2022, 4:00 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1016.96 புள்ளிகள் உயர்ந்து 57,426.92 புள்ளிகளை எட்டியுள்ளது
Sep 30, 2022, 3:59 pm IST
இன்போசிஸ் செப்டம்பர் காலாண்டு முடிவில் பைபேக் அறிவிக்க வாய்ப்பு அதிகம்
Sep 30, 2022, 3:59 pm IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 2.44 சதவீதம் உயர்ந்து 2,382.00 ரூபாயில் உள்ளது
Sep 30, 2022, 3:59 pm IST
ஆர்பிஐ-யின் ரெப்போ விகித உயர்வு அதிகப்படியான பலன்களை அளித்துள்ளது
Sep 30, 2022, 2:58 pm IST
சென்செக்ஸ் குறியீடு 1300 புள்ளிகள் வரையில் உயர்வு
Sep 30, 2022, 2:58 pm IST
Stoxx Europe 600 1.1% உயர்ந்தது
Sep 30, 2022, 2:58 pm IST
S&P 500 பியூச்சர்ஸ் 0.8% உயர்ந்தது
Sep 30, 2022, 2:58 pm IST
நாஸ்டாக் 100 பியூச்சர்ஸ் 0.9% உயர்ந்தது
Sep 30, 2022, 2:58 pm IST
டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி பியூச்சர்ஸ் 0.6% உயர்ந்தது
Sep 30, 2022, 2:58 pm IST
MSCI ஆசிய பசிபிக் குறியீடு 0.5% சரிந்தது
Sep 30, 2022, 2:58 pm IST
MSCI எமர்ஜிங்க் மார்கெட்ஸ் குறியீடு 0.2% உயர்ந்தது
Sep 30, 2022, 2:57 pm IST
Airox டெக்னாலஜிஸ் 750 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ வெளியிட செபியிடம் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளது
Sep 30, 2022, 2:57 pm IST
அன்னிய செலாவணி கையிருப்பு 67 சதவீதம் சரிவுக்கு டாலர் மதிப்பீட்டில் ஏற்பட்ட சரிவு தான் காரணம் என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்
Sep 30, 2022, 2:57 pm IST
அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் 13.42 சதவீதம் உயர்வு
Sep 30, 2022, 2:57 pm IST
நிஃப்டி 17000 புள்ளிகளைத் தொட்டது
Sep 30, 2022, 2:56 pm IST
மதர்சன் சுமி 2:5 போனஸ் அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது
Sep 30, 2022, 12:44 pm IST
800 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்
Sep 30, 2022, 12:44 pm IST
டெக் மஹிந்திரா, இன்போசிஸ், டிசிஎஸ், டாக்டர் ரெட்டி, ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் மட்டும் சரிவு
Sep 30, 2022, 12:44 pm IST
ஹெச்டிஎப்சி வங்கி பங்குகள் 3 சதவீதம் வரையில் உயர்வு
Sep 30, 2022, 12:43 pm IST
டிசம்பர் மாத நாணய கொள்கை கூட்டத்தில் 25-35 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதம் உயர அதிக வாய்ப்பு
Sep 30, 2022, 12:43 pm IST
நாணய கொள்கை தளர்வுகளை குறைக்கும் பணி தொடரும்
Sep 30, 2022, 12:43 pm IST
பொருளாதார வளர்ச்சி - பணவீக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது
Sep 30, 2022, 12:43 pm IST
ஆர்பிஐ நாணய கொள்கை முடிவுகளுக்கு இக்குழுவில் இருந்த சக்திகாந்த தாஸ், ஷஷாங்கா பிடே, ஆஷிமா கோயல், ராஜீவ் ரஞ்சன், மைக்கேல் தேபப்ரதா பத்ரா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.
Sep 30, 2022, 12:43 pm IST
ஆர்பிஐ நாணய கொள்கை முடிவுகளுக்கு ஜெயந்த் ஆர் வர்மா மட்டும் எதிர்த்து வாக்களித்தார்.
Sep 30, 2022, 12:43 pm IST
ஏப்ரல் மாதத்தில் இருந்து ரூபாய் மதிப்பு 4 சதவீதம் சரிந்துள்ளது
Sep 30, 2022, 12:43 pm IST
அமெரிக்க டாலர் மதிப்பு 14 சதவீதம் அதிகரித்துள்ளது
Sep 30, 2022, 11:13 am IST
ஆர்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்திய பின்பு மும்பை பங்குச்சந்தை உயர்ந்துள்ளது
Sep 30, 2022, 11:13 am IST
குறிப்பாக அன்னிய முதலீட்டளர்களின் முதலீடுகள் அதிகரித்துள்ளது
Sep 30, 2022, 11:13 am IST
தொடர்ந்து வெளியேறி வந்த அன்னிய முதலீடுகள் தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது
Sep 30, 2022, 11:12 am IST
சென்செக்ஸ் குறியீடு 404.37 புள்ளிகள் அதிகரித்து 56,814.33 புள்ளிகளை எட்டியுள்ளது
Sep 30, 2022, 11:12 am IST
சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 56,957 புள்ளிகள் வரையில் அதிகரித்துள்ளது
Sep 30, 2022, 10:47 am IST
அன்னிய செலவாணி கையிருப்பு 537.5 பில்லியன் டாலராக உள்ளது
Sep 30, 2022, 10:47 am IST
வங்கி கிரெடிட் அளவு 16.2 சதவீத வளர்ச்சி பாதையில் உள்ளது
Sep 30, 2022, 10:47 am IST
விவசாய துறை வளர்ச்சி பாதையில் உள்ளது நாட்டின் பொருளாதாரா வளர்ச்சிக்கு ஆதரவாக உள்ளது
Sep 30, 2022, 10:47 am IST
கச்சா எண்ணெய் விலை குறைந்தால் விலைவாசி குறையும்
Sep 30, 2022, 10:47 am IST
28 நாள் VRRR ஏலம் 14 நாள் VRRR ஏலத்துடன் இணைப்பு
Sep 30, 2022, 10:43 am IST
2023ஆம் நிதியாண்டில் GDP வளர்ச்சி அளவு 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைப்பு
2வது காலாண்டு - 6.3%
3வது காலாண்டு - 4.6%
4வது காலாண்டு - 4.6%
Sep 30, 2022, 10:28 am IST
2023ஆம் நிதியாண்டில் GDP வளர்ச்சி அளவு 7.2 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக குறைப்பு - ஆர்பிஐ கவர்னர்
Sep 30, 2022, 10:27 am IST
பணவீக்க அளவில் எவ்விதமான மாற்றமும் இல்லை
Sep 30, 2022, 10:27 am IST
2023ஆம் நிதியாண்டில் பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் - ஆர்பிஐ சக்திகாந்த தாஸ் அறிவிப்பு
Sep 30, 2022, 10:15 am IST
ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம் உயர்வு
Sep 30, 2022, 10:15 am IST
ரெப்போ விகிதம் 5.90 சதவீதமாக உயர்வு
Sep 30, 2022, 10:15 am IST
SDF விகிதம் 5.65 சதவீதமாக உயர்வு
Sep 30, 2022, 10:15 am IST
MSF விகிதம் 6.15 சதவீதமாக உயர்வு
Sep 30, 2022, 10:15 am IST
2.5 வருடத்தில் உலகம் இரண்டு பாதிப்புகளை எதிர்கொண்டது கொரோனா, உக்ரைன் போர்
Sep 30, 2022, 10:14 am IST
தற்போது 3வது பாதிப்பாக உலகம் முழுவதும் மத்திய வங்கிகள் நாணய கொள்கையில் வட்டி விகித்தை உயர்த்தி வருகிறது - சக்திகாந்த தாஸ்
Sep 30, 2022, 10:14 am IST
தற்போதைய அளவு, புதிய மாற்றங்கள் அடுத்த சில நிமிடத்தில் அறிவிப்பு
ரெப்போ விகிதம் - 5.40 சதவீதம்
SDF விகிதம் - 5.65 சதவீதம்
MSF விகிதம் - 5.65 சதவீதம்
Sep 30, 2022, 9:53 am IST
ஆர்பிஐ 4வது முறையாக நடப்பு நிதியாண்டில் ரெப்போ விகிதத்தை உயர்த்த உள்ளது.
Sep 30, 2022, 9:53 am IST
ஆர்பிஐ இன்று ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.50 சதவீதம் வரையில் வட்டி விகிதத்தை அதிகரித்து ரெப்போ விகிதத்தை 5.9 சதவீதமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sep 30, 2022, 9:52 am IST
ரெப்போ விகிதம் உயர்ந்தால் கட்டாயம் அனைத்து கடன்களுக்குமான வட்டி விகிதம் உயரும் நிலையில் உள்ளது
Sep 30, 2022, 9:52 am IST
சமீபத்தில் வட்டி விகிதத்தை உயர்த்திய நாடுகள்
அமெரிக்கா - 0.75 சதவீதம்
தென்னாப்பிரிக்கா - 0.75 சதவீதம்
ஐக்கிய அரபு நாடுகள் - 0.75 சதவீதம்
சவுதி அரேபியா - 0.75 சதவீதம்
ஹாங்காங் - 0.75 சதவீதம்
பிலிப்பைன்ஸ் - 0.50 சதவீதம்
இந்தோனேசியா - 0.50 சதவீதம்
சுவிட்சர்லாந்து - 0.75 சதவீதம்
நார்வே - 0.50 சதவீதம்
தைவான் - 0.12.5 சதவீதம்
Sep 30, 2022, 9:30 am IST
84 புள்ளிகள் சரிவுடன் சென்செகஸ் துவங்கியது
Sep 30, 2022, 9:30 am IST
டெக் மஹிந்திரா, இன்போசிஸ், விப்ரபோ, டிசிஎஸ் பங்குகள் சரிவு
Sep 30, 2022, 9:29 am IST
ஹெச்டிஎப்சி, மஹிந்திரா, மாருதி சுசூகி, பஜாஜ் பின்சர்வ் பங்குகள் சரிவு
Sep 30, 2022, 9:29 am IST
சன் பார்மா பங்குகள் 0.69 சதவீதம் உயர்வு
Sep 30, 2022, 9:29 am IST
அல்ட்ரா டெக், நெஸ்லே, பவர் கிரிட், ஐடிசி பங்குகள் உயர்வு
Sep 30, 2022, 9:29 am IST
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் உயர்வு
Sep 30, 2022, 9:29 am IST
எஸ்பிஐ பங்குகள் சரிவு
Sep 30, 2022, 9:28 am IST
ஜூன் காலாண்டில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 23.9 பில்லியன் டாலர் உடன் 2.8 சதவீதமாக உள்ளது
Sep 30, 2022, 9:28 am IST
உணவுப் பொருட்கள் பணவீக்கம் தான் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துகிறது
Sep 30, 2022, 9:28 am IST
7 நாட்களாக தொடர் சரிவில் மும்பை பங்குச்சந்தை
Sep 30, 2022, 9:28 am IST
7 நாட்களில் சென்செக்ஸ் 3000 புள்ளிகள் வரையில் சரிவு
Sep 30, 2022, 9:28 am IST
7 நாட்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 2 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை வெளியேற்றியுள்ளனர்.
Sep 30, 2022, 9:28 am IST
இந்தியாவில் வீட்டுச் செலவுகள் 2022ல் 22 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது
Sep 30, 2022, 8:27 am IST
இன்று ஆர்பிஐ 50 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை அதிகரித்து ரெப்போ விகிதத்தை 5.9 சதவீதமாக அறிவிக்கும் - மோர்கன் ஸ்டான்லி கணிப்பு
Sep 30, 2022, 8:27 am IST
பணவீக்கத்தின் பாதிப்பு அதிகமாக இருக்கும் காரணத்தால் வளர்ச்சியில் ரிஸ்க் காராணிகள் அதிகமாகியுள்ளது - பாங்க் ஆப் பரோடா
Sep 30, 2022, 8:27 am IST
ஆர்பிஐ டிசம்பர் மாதத்திற்குள் ரெப்போ விகிதத்தை 6-6.25 சதவீதம் வரையில் அதிகரிக்கும் - பாங்க் ஆப் பரோடா
Sep 30, 2022, 8:27 am IST
ஜனவரியில் இருந்து பெரும்பாலான உணவு பொருட்கள் விலை அதிகரித்துள்ளது.
Sep 30, 2022, 8:27 am IST
சமையல் எண்ணெய் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது.
Sep 30, 2022, 8:26 am IST
ஆகஸ்ட் மாதம் நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக உள்ளது
Share This Article
English summary
rbi mpc live updates sensex nifty live today 30 sep 2022: monetary policy reserve bank of india shaktikanta das
rbi mpc live updates sensex nifty live today 30 sep 2022: monetary policy reserve bank of india shaktikanta das will announce MPC decisions
Story first published: Friday, September 30, 2022, 16:00 [IST]
See More On: சென்செக்ஸ், நிஃப்டி, பிஎஸ்ஈ, என்எஸ்ஈ, sensex, nifty, nse, bse, rbi, mpc, ஆர்பிஐ