ரிசர்வ் முடிவால் சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்.. கிட்டதட்ட ரூ.4 லட்சம் கோடி லாபம்.. !

இந்திய ரிசர்வ் வங்கியானது எதிர்பார்த்ததை போலவே 50 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகரிப்பினை செய்துள்ளது. இது கடந்த 5 மாதத்தில் 4வது முறையாக வட்டி அதிகரிப்பினை செய்துள்ளது. இதற்கிடையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.

இன்று காலை சரிவில் தொடங்கிய சந்தையானது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு பிறகு ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. குறிப்பாக சென்செக்ஸ் 1016.96 புள்ளிகள் வட்டி அதிகரித்து, 57,426.92 புள்ளிகளாக காணப்பட்டது. இதே நிஃப்டி 276.25 புள்ளிகள் அல்லது 1.64% அதிகரித்து, 17,094.35 புள்ளிகளாக அதிகரித்து காணப்பட்டது.

 தொடக்க நிலவரம்?

தொடக்க நிலவரம்?

இன்று காலை தொடக்கத்தில் சென்செக்ஸ் 145.67 புள்ளிகள் குறைந்து, 56,264.29 புள்ளிகளாக தொடங்கியது. இதே நிஃப்டி 36.10 புள்ளிகள் குறைந்து, 16,782 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 1020 பங்குகள் ஏற்றம் கண்டும், 831 பங்குகள் சரிவிலும், 125 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 இன்டெக்ஸ் நிலவரம்

இன்டெக்ஸ் நிலவரம்

சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள பிஎஸ்இ ஆயில் & கேஸ் குறியீடானது சற்று சரிவில் காணப்பட்டது. இன்றைய வர்த்தக முடிவில் அதிகபட்சமாக பேங்க் நிஃப்டி 2.61% அதிகரித்தும்,பிஎஸ்இ மெட்டல்ஸ் 2.66% என்ற விகிதத்திலும் ஏற்றத்தில் காணப்பட்டது. மற்ற அனைத்து குறியீடுகளும் 2% கீழாக ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.

 நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஹிண்டால்கோ, பார்தி ஏர்டெல், இந்தஸ் இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், கோல் இந்தியா, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், பிரிட்டானியா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளது.

 சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ளிட்ட பங்குகள் பார்தி ஏர்டெல், இந்தஸ் இந்த் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி, டைட்டன் நிறுவனம் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஐடிசி, டெக் மகேந்திரா, ஹெச் யு எல் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் முடிவடைந்துள்ளது.

 ரூபாய் முடிவு

ரூபாய் முடிவு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 50 பைசா அதிகரித்து, 81.35 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வில் 81.85 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இது ரிசர்வ் வங்கியின் வட்டி அதிகரிப்பு நடவடிக்கைக்கு மத்தியில் சற்று ஏற்றம் கண்டுள்ளது.

யாருக்கு லாபம்

யாருக்கு லாபம்

சந்தையில் இன்றைய ஏற்றத்தின் மத்தியில் 3.73 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பானது ஏற்றம் கண்டுள்ளது. இதன் மூலம் பிஎஸ்இ-யில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் 271.88 கோடி ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+