இந்திய ரிசர்வ் வங்கியானது எதிர்பார்த்ததை போலவே வட்டி அதிகரிப்பினை செய்துள்ளது. இதற்கிடையில் தொடக்கத்தில் இந்திய சந்தையானது சரிவில் தொடங்கியிருந்தாலும், வட்டி அதிகரிப்பு எதிரொலியால் மீண்டும் அதிகரித்துள்ளது.
இன்று காலை ப்ரீ ஓபனிங் சந்தையில் சென்செக்ஸ் 285.70 புள்ளிகள் வட்டி அதிகரித்து, 56,124.26 புள்ளிகளாக காணப்பட்டது. இதே நிஃப்டி 83.10 புள்ளிகள் அல்லது 16,735 புள்ளிகள் அதிகரித்து காணப்பட்டது.
இதனையடுத்து இந்திய ரூபாயின் மதிப்பானது 81.57 ரூபாயாக பெரியளவில் மாற்றமின்றி தொடங்கியது. இது கடந்த அமர்வில் 81.85 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பங்கு சந்தை தொடக்கம்
தொடக்கத்தில் இந்திய பங்கு சந்தையானது சரிவிலேயே காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 145.67 புள்ளிகள் குறைந்து, 56,264.29 புள்ளிகளாக தொடங்கியது. இதே நிஃப்டி 36.10 புள்ளிகள் குறைந்து, 16,782 புள்ளிகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 1020 பங்குகள் ஏற்றம் கண்டும், 831 பங்குகள் சரிவிலும், 125 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ் நிஃப்டி குறியீட்டில் உள்ள அனைத்து குறியீடுகளில், நிஃப்டி ஐடி, பிஎஸ்இ மிட் கேப், பிஎஸ்இ எஃப்எம்சிஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்பட்டது. மற்ற அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்தில் காணப்பட்டது. குறிப்பாக பேங்க் நிஃப்டி மட்டும் 1% மேலாக காணப்படுகிறது.
நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்
நிஃப்டி குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், ஓ என் ஜி சி, ஹிண்டால்கோ, அல்ட்ராடெக் சிமெண்ட், கோடக் மகேந்திரா டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், அல்ட்ராடெக் சிமெண்ட், கோடக் மகேந்திரா, ஹெச் டி எஃப் சி வங்கி, ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் மட்டுமே டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ், டெக் மகேந்திரா, டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ், விப்ரோ பங்கு மட்டும் டாப் லூசராக உள்ளது.
தற்போதைய நிலவரம்
தொடக்கத்தில் இந்திய பங்கு சந்தையானது சரிவில் காணப்பட்டாலும், 11.20 நிலவரப்படி, சென்செக்ஸ் 516.56 புள்ளிகள் அதிகரித்து, 56,926.52 புள்ளிகளாக தொடங்கியது. இதே நிஃப்டி 142.30 புள்ளிகள் அதிகரித்து, 16,963.55 புள்ளிகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!



Click it and Unblock the Notifications