அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2026ஆம் ஆண்டில் மட்டும் 90 ரூபாயில் இருந்து 97 ரூபாய் வரையில் சரிந்துள்ளது, கடந்த 4 வாரத்தில் நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு 51 பில்லியன் டாலர் குறைந்துள்ளது, ஆர்பிஐ தரவுகள் படி 200 பில்லியன் டாலர் மதிப்பிலான ஷார்ட் டாலர் ஃபார்வோர்டு பொசிஷன் வைக்கப்பட்டு உள்ளது, 2026ல் மட்டும் இந்திய பங்குச்சந்தையில் இருந்து சுமார் 30 பில்லியன் டாலர் வெளியேறியுள்ளது, இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 85 சதவீதம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
மேலே கூறப்பட்ட அனைத்திற்கும் ரூபாய் மதிப்பு சரிவுக்கும், இந்திய பொருளாதார சரிவுக்கும் மிகவும் நெருக்கமான தொடர்பு உள்ளது.

இந்த நிலையில் ஆர்பிஐ ரூபாய் மதிப்பின் சரிவைக் கட்டுப்படுத்த பல முயற்சிகள் செய்திருந்த நிலையிலும் தோல்வியுற்ற நிலையில் 2 முக்கியமான நடவடிக்கைகளை ஆர்பிஐ மேற்கொண்டு உள்ளது.
2013க்கு பின்பு ஆர்பிஐ ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்த கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டு உள்ளது. இதற்கான 2 முக்கிய அறிவிப்புகள் சனிக்கிழமை வெளியான நிலையில், நாளை வர்த்தகத்தில் இதன் உண்மையான தாக்கம் தெரிய வரும் என்பதால், திங்கட்கிழமை வர்த்தகம் மிகவும் முக்கியமானதாக மாறுகிறது.
1. டாலர் விண்டோ
ஆர்பிஐ, மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்குத் தனியாக டாலர் விண்டோ திறந்துள்ளது. இந்தியாவில் அதிகளவில் இறக்குமதிக்காக டாலர் பயன்படுத்தும் துறையாக இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் ரீடைல் சந்தையில் இருந்து டாலரை வாங்குவதை நிறுத்தவும், தேவையான டாலரை ஆர்பிஐ நேரடியாக வழங்கவும் முடிவு செய்து இந்த டாலர் விண்டோ திறக்கப்பட்டு உள்ளது.
இந்த ஒரு நடவடிக்கையால் ரீடைல் சந்தை அல்லது ஓப்பன் மார்கெட்டில் ரூபாய் மதிப்பின் தடுமாற்றத்தைப் பெரிய அளவில் குறைக்க முடியும். ரீடைல் சந்தையில் சப்ளை - டிமாண்ட் பிரச்சனையைத் தீர்ப்பது மூலம் ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்த முடியும்.
2. டெரவேட்டிவ் வர்த்தகத்திற்கு செக்
ரூபாய்க்கு எதிராக வெளிநாட்டு நாணயங்களின் டெரேவட்டிவ் வர்த்தகம் செய்வோருக்கு 20 சதவீத தொகையை வங்கிகள் லாக் அப் செய்யும் புதிய விதியை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் ரூபாய்க்கு எதிராக டெரவேட்டிவ் சந்தையில் பெட்டிங் செய்யும் போது கூடுதல் தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும். இதனால் லாப அளவீடுகள் குறையும்.இதோடு பெட்டிங் அளவு குறையும், ரூபாய் மதிப்பில் ஏற்படும் சரிவைக் கட்டுப்படுத்த முடியும்.
இந்த முக்கியமான ஐடியாவை சீனாவின் மத்திய வங்கியான People's Bank of China பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்தியா இதைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளது.
$200 பில்லியன் ஷார்ட் டாலர் ஃபார்வோர்டு பொசிஷன்
ஏற்கனவே கூறியது போல் ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்த 200 பில்லியன் டாலர் மதிப்பிலான ஷார்ட் டாலர் ஃபார்வோர்டு பொசிஷன் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது ஆர்பிஐ வரும் காலத்தில் குறிப்பிட்ட தேதிகளில், குறித்த ரூபாய் மதிப்பிற்கு அமெரிக்க டாலர்களை விற்கவும், அதற்குப் பதிலாக இந்திய ரூபாயை வாங்கவும் ஒப்பந்தம் (Forward contract) செய்துள்ளது.
இது ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்த ஒரு முக்கிய ஆயுதமாக இருந்தாலும், தற்போது ரூபாய் மதிப்பு சரியும் போது பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது.
இதன் வாயிலாக ஆர்பிஐ தற்போது Forward contract அளவை மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து கொண்டே இருந்தால் பெரும் சரிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் ஒப்பந்த அளவை தொடர்ந்து குறைத்து வருகிறது.
உதாரணமாக ஒவ்வொரு Forward contract ஒப்பந்தமும் குறிப்பிட்ட ரூபாய் மதிப்பில் டாலரை விற்க ஒப்பந்தம் செய்யப்படும். உதாரணமாக 90 ரூபாய்க்கு விற்பதாக ஒப்பந்தம் செய்யப்படும் போது, சந்தையில் ரூபாய் மதிப்பு 96 ஆக இருந்தால் ஆர்பிஐ பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்.
இதை ஈடுகட்ட ஆர்பிஐ அன்னிய செலாவணி இருப்பிலிருந்து தான் டாலரை எடுத்துக்கொடுக்க வேண்டிய கட்டாயம் உருவாகும் இது நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம், நிதி நிலை என அனைத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அச்சமும் இந்த Forward contract ஒப்பந்தம் மூலம் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications

