அமெரிக்கா சீனா மத்தியிலான வர்த்தக போரும், பொருளாதார போட்டியும் பெரியளவிலான மாற்றத்தை முதலீட்டுச் சந்தையில் உருவாக்கி வருகிறது.
டாலர் ஆதிக்கம், அமெரிக்கப் பத்திர சந்தையால் சீனா பங்குச்சந்தைக்குப் பாதிப்பு, ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஆதிக்கம் கைமாறுவது, வர்த்தக தடைகள், உலகளாவிய நெருக்கடி எனப் பல வகையில் சீனா மற்றும் அமெரிக்கா மத்தியில் போட்டியிருந்து வரும் வேளையில், சீனா மறைமுகமாக அமெரிக்காவின் கோட்டை தகர்க்க முடிவு செய்துள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்க அரசு பத்திரத்தை வாங்கி குவித்து வரும் இதேவேளையில் அமெரிக்க அரசின் கடனும் 40 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது அந்நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் சுமையாக மாறும் என கணித்துள்ள சீனா, அமெரிக்க அரசு பத்திரங்களைத் தொடர்ந்து விற்பனை செய்து வரும் இதேநேரத்தில் தங்கத்தை அதிகளவில் வாங்கி தனது யுவான் நாணயத்திற்கு வலிமை சேர்த்து வருகிறது.
இதன் எதிரொலியாகக் கடந்த 23 மாதங்களாகத் தங்கத்தைத் தொடர்ந்து வாங்கி குவித்து வருகிறது, இதன் எதிரொலியாகச் செப்டம்பர் மாதத்தில் சீன தங்க இருப்பின் அளவு 77.47 மில்லியன் அவுன்ஸாக உயர்ந்துள்ளது.
இதுவே ஆகஸ்ட் மாதத்தில் இந்த தங்க இருப்பு அளவு 76.73 மில்லியனாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சீனாவின் தங்க இருப்பின் மதிப்பு 360 பில்லியன் டாலராகச் செப்டம்பர் மாத இறுதியில் தொட்டு உள்ளது.
உலகில் எந்தொரு நாடும் 23 மாதங்களாகத் தொடர்ந்து தங்கம் வங்கியது இல்லை என்ற தனி சாதனையைப் படைத்திருக்கிறது சீனா. ஜி ஜின்பிங் தலைமையிலான அரசு பிரிக்ஸ் நாடுகளுடன் இணைந்து டாலருக்கு எதிரான நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறது.
அதாவது உலக நாடுகள் வர்த்தகத்திற்கு டாலரை மட்டுமே பயன்படுத்தக் கூடாது, மாற்று நாணயத்தைப் பயன்படுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக பிரிக்ஸ் நாடுகள் அதிகளவில் தங்கத்தை வாங்கி வருகிறது. இதேபோல் அமெரிக்க அரசு உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலைத் துவங்கிய பின்பு ரஷ்யாவின் அனைத்து சொத்துக்களையும் முடங்கியதால் சீனா அமெரிக்கப் பத்திரங்கள் அல்லாத சொத்துகளை வாங்க முடிவு செய்தது.
சீனாவின் தங்கக் கொள்முதல் காரணமாகத் தங்கம் விலை பெரிய சரிவில் இருந்து தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகிறது, மேலும் இந்தியா உட்படப் பல நாடுகள் தற்போது தங்கத்தை வாங்குவதைத் தாண்டி வெளிநாட்டில் இருக்கும் தங்கத்தைத் தாய் நாட்டிற்குக் கொண்டு வருவதை முக்கிய பணியாக வைத்துள்ளது.
2026ஆம் ஆண்டில் மட்டும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் சுமார் 700 டன் தங்கத்தை வாங்கியுள்ளது, 2010-2021 வரையிலான காலகட்டத்தில் சராசரியாக வருடத்திற்கு 470 மட்டுமே வாங்கப்பட்ட நிலையில் தற்போது 700 டன் தங்கத்தை உலக நாடுகளின் மத்திய வங்கி வாங்கியுள்ளது.
சீனா கடந்த 2 வருடங்களாக தங்கத்தை வாங்கி வருவது அமெரிக்காவுக்கு எதிரான கோல்டு வார் ஆகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

