ஆர்டிபி குழுமத்தை சேர்ந்த ஆர்டிபி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பவர் நிறுவனம், ரியல் எஸ்டேட் டெவலப்மென்ட் மற்றும் கட்டுமான வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் முன்பு ஆர்டிபி ரியாலிட்டி அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனம், புதுடெல்லி, மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் சென்னை உள்பட பல்வேறு வேகமாக வளர்ந்து நகரங்களில் வலுவான வர்த்தக இருப்பை கொண்டுள்ளது.
ஆர்டிபி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இந்நிறுவனம் அண்மையில் பங்கு பிரிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இந்நிறுவனம் ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு ஈக்விட்டி பங்கினை முழுவதும் செலுத்தப்பட்ட ரூ.1 முக மதிப்பு கொண்ட 10 பங்குகளாக பிரித்தது. ஆர்டிபி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன வரலாற்றில் தற்போதுதான் முதல் முறையாக பங்கு பிரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பங்கு பிரிப்புக்கு இப்பங்கின் விலை 10 மடங்கு மலிவானது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.57.00ஆக இருந்தது. பங்கு பிரிப்புக்கு முன் இப்பங்கின் விலை ரூ.550க்கு மேல் இருந்தது.

இந்நிலையில், ஆர்டிபி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இந்நிறுவனம் தற்போது வர்த்மான் குரூப் ரியல்பில்ட் எல்எல்பி நிறுவனத்திடமிருந்து ரூ.42 கோடி மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் அறிக்கையில் இந்த தகவலை இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடத்தில் ஆர்டிபி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் அண்ட் பவர் நிறுவன பங்கு விலை 287 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 1,416 சதவீதம் மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த மல்டிபேக்கர் பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 1,887 சதவீதம் பெருக்கியுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 2,840 சதவீதம் ஆதாயத்தை கொடுத்துள்ளது. 2024 டிசம்பர் 10ம் தேதியன்று இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.61.27ஐ எட்டியது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து லாபத்தை ஈட்டி வரும் நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்நிறுவனம் கடந்த 2023-24ம் நிதியாண்டில் வருவாயாக ரூ.83.31 கோடி ஈட்டியுள்ளது. மேலும் அந்த நிதியாண்டில் நிகர லாபமாக ரூ.3.86 கோடி ஈட்டியுள்ளது. 2024 ஜூன் மற்றும் செப்டம்பர் காலாண்டுகளிலும் இந்நிறுவனம் லாபம் சம்பாதித்துள்ளது. இந்நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் திருப்திகரமாக இருப்பதால் முதலீட்டாளர்கள் எப்போதும் இந்நிறுவன பங்கின் மீது ஒரு பார்வை வைத்துள்ளனர்.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications