செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மீது குவிந்த அதிகப்படியான முதலீடும், ஐரோப்பிய சந்தையின் நிலையான வர்த்தக சூழ்நிலையின் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 100 புள்ளிகள் வரையிலான உயர்வை சந்தித்தது.
ஆனால் இந்த வாரம் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிடுவதால், மந்தமான வர்த்தக சூழ்நிலையே இன்றைய வரத்தகம் முழுவதும் நிலைத்தது.

இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட் துறை 2.99 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது, இதை தொடர்ந்து நுகர்வோர் நிறுவனங்கள் 0.84 சதவீதம், ஐடி நிறுவனங்கள் 0.43 சதவீதம், எப்எம்ஜிசி 0.35 சதவீதம் அளவில் உயர்ந்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 90.40 புள்ளிகள் உயர்ந்து 34,443.19 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 13.40 புள்ளிகள் உயர்ந்து 10,637.00 புள்ளிகளையும் அடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications