இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. தீவிரவாத தாக்குதல் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருவது, முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்தது, தொடர்ச்சியாக 7 தினங்கள் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வந்தது, நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் மந்தமாக இருப்பது போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் பங்கு வர்த்தகம் பெரிய சரிவை சந்தித்தது.
குறிப்பாக மும்ப பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே சுமார் 1,200 புள்ளிகள் சரிந்தது. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.9.7 லட்சம் கோடி குறைந்து ரூ.419.86 லட்சம் கோடியாக சரிவடைந்தது.

அதிகரித்து வரும் இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்
அப்பாவி மக்கள் 26 பேரின் உயிரை பறித்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு மேலும் மோசமடைந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் சந்தை உணர்வு ஆபத்தை எதிர்கொண்டது. இந்தியா இராஜந்திர உறவுகளை குறைத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தது முதலீட்டாளர்களின் நமபிக்கையை குறைக்கக் கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நிதி பங்குகள் சரிவு
சென்செக்ஸ் சரிவுக்கு ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய முக்கிய பங்களிப்பை அளித்தன. கோடக் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பிற வங்கி பங்குகளும் சரிவை சந்தித்தன. இந்த பங்குகள் ஒட்டுமொத்த சென்செக்ஸ் வீழ்ச்சியில் 360 புள்ளிகளுக்கு மேல் பங்களித்தன.
மந்தமான நிதி நிலை முடிவுகள்
பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இதுவரை வெளியானதில் பல நிறுவனங்கள் எதிர்பார்த்ததை விட குறைவான வருவாயை பதிவு செய்து இருந்தன. உதாரணமாக ஆக்சிஸ் வங்கியின் நிகர லாபம் 0.2 சதவீதம் குறைந்துள்ளது, இன்போசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் பலவீனமான வருவாய் வழிகாட்டுதல்களை வெளியிட்டன.
தொழில்நுட்ப இன்டிகேட்டர்கள்
சாம்கோ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் டெரிவேடிவ்ஸ் ஆராய்ச்சி ஆய்வாளர் துபேஷ் தமேஜா கூறுகையில், முந்தைய அமர்வில் ஒரு சிறிய இறங்குமுகமான கேண்டில் உருவானது. இது சந்தை பங்கேற்பாளர்களிடையே சந்தையின் திசை சார்ந்த நம்பிக்கை இல்லாததை குறிக்கிறது. ஏற்கனவே ஒரு கூர்மையான ஏற்றம் பின்னால் இருப்பதால், இன்டெக்ஸ் இப்போது நேர வாரியான சரிசெய்தல் (சரிவு) கட்டத்தில் நுழைவது போல் தெரிகிறது. பரவலாக நிஃப்டி 24,500 முதல் 24,000 வரை வரையறுக்கப்பட்ட வரம்பை உருவாக்கியுள்ளது. இது வரும் வர்த்தக தினங்களில் முக்கிய முடிவு மண்டலமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மதிப்பீடு கவலைகள்
புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக நேற்று பங்குச் சந்தைகளில் ஏற்றம் தடைப்பட்டது. அதற்கு முன்பு தொடர்ச்சியாக 7 வர்த்தக தினங்களில் நிஃப்டி சுமார் 8.6 சதவீதம் உயர்ந்தது. இந்த வாரத்தில் நிஃப்டி சுமார் 1.7 சதவீதம் உயர்ந்துள்ளபோதிலும், ஏற்ற மதிப்பீடுகள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. இது முதலீட்டாளர்களை லாபத்தை பதிவு செய்யவும் (பங்குகளை விற்பனை) மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையை எடுக்கவும் தூண்டுகிறது.
ரூ.1 லட்சம் ரூ.4.72 கோடியாக மாறிய அதிசயம்.. டைனகான்ஸ் சிஸ்டம்ஸ் பங்கு உங்ககிட்ட இருக்கா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவாரா பிரதமர் மோடி? ரம்ஜான் நாளில் தொடங்கிய முக்கிய பேச்சுவார்த்தை..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications