பங்குச் சந்தையில் பிரபலமான முதலீட்டாளர்களில் ஒருவர் ரேகா ஜூன்ஜூன்வாலா. நிறுவன பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வதில் தனது கணவருக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர் அல்ல ரேகா ஜூன்ஜூன்வாலா. இவரது கணவர் வேறு யாருமில்ல, இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்பட்டவரும், பிரபல முதலீட்டாளருமான மறைந்த ஜூன்ஜூன்வாலாவின் மனைவிதான் இவர். 2022 ஆகஸ்ட் மாதத்தில் உடல் நலக்குறைவு காரணமாக ஜூன்ஜூன்வாலா மறைந்தார்.
பங்குச் சந்தை சில்லரை முதலீட்டாளர்களில் பலர், ரேகா ஜூன்ஜூன்வாலாவை பின்பற்றி, அவர் என்ன பங்குகளில் முதலீடு செய்கிறார் என்பதை தெரிந்து கொண்டு அந்த பங்குகளில் முதலீடு செய்கின்றனர். இதனால் ரேகா ஜூன்ஜூன்வாலா எந்தவொரு பங்கிலும் முதலீடு செய்தாலும் அந்த பங்கு லைம் லைட்டுக்கு வந்து விடும். அந்த வகையில் தற்போது ஒரு பொதுத்துறை வங்கி பங்கின் மீது முதலீட்டாளர்களின் கவனம் விழுந்துள்ளது.

ரேகா ஜூன்ஜூன்வாலா கடந்த மார்ச் காலாண்டில் (2025 ஜனவரி-மார்ச்) காலாண்டில் தனது போர்ட்போலியாவில், புதிதாக ரூ.100க்கு குறைவான ஒரு பொதுத்துறை வங்கி பங்கு ஒன்றை சேர்த்துள்ளார். அந்த பொதுத்துறை வங்கி கனரா வங்கி. டிரெண்ட்லைன் தரவுகளின்படி, கடந்த மார்ச் காலாண்டில், கனரா வங்கியின் 13.24 கோடி பங்குகளை மொத்தம் ரூ.1,991.1 கோடிக்கு ரேகா ஜூன்ஜூன்வாலா வாங்கியுள்ளார். இது கனரா வங்கியின் மொத்த பங்குகளில் 1.5 சதவீதமாகும்.
இது முக்கியமான விஷயம் என்னவென்றால், கடந்த டிசம்பர் காலாண்டில் தான், தன்னிடம் இருந்த அனைத்து கனரா வங்கி பங்குகளையும் ரேகா ஜூன்ஜூன்வாலா விற்பனை செய்து இருந்தார். அதற்கு முந்தைய கடந்த செப்டம்பர் காலாண்டு இறுதி நிலவரப்படி, கனரா வங்கியில் 1.42 சதவீத பங்கு மூலதனத்தை ரேகா ஜூன்ஜூன்வாலா வைத்து இருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் கனரா வங்கி பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 2.23 சதவீதம் உயர்ந்து ரூ.90.45ஆக இருந்தது. பொதுத்துறை வங்கிகளில் தொடர்ந்து நல்ல லாபம் ஈட்டி வரும் வங்கிகளில் ஒன்று கனரா வங்கி. கடந்த டிசம்பர் (2024 அக்டோபர்-டிசம்பர்) காலாண்டில் கனரா வங்கி வருவாயாக ரூ.30,311.61 கோடி ஈட்டியது.
அதே காலாண்டில் கனரா வங்கி நிகர லாபமாக ரூ.4,104.20 கோடி ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த காலாண்டில் கனரா வங்கியின் ஒரு பங்கு வாயிலான வருமானம் ரூ.4.52ஆக இருந்தது. இது முந்தைய செப்டம்பர் காலாண்டைக் (2024 ஜூலை-செப்டம்பர்) காட்டிலும் சிறிது (ரூ.4.43) அதிகமாகும்.
அமெரிக்கர்களை உசுப்பேத்தும் சீனா... டிரம்பால் பாதிக்கப்பட போவது நாங்கல்ல நீங்கதான்..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

ஓரே நாளில் 6.5 லட்சம் கோடி இழப்பு.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications