ஒரே நாளில் ரூ.900 கோடி லாபம் பார்த்த ரேகா ஜூன்ஜூன்வாலா... எப்படி தெரியுமா..?

பங்குச் சந்தையில் பிரபலமான முதலீட்டாளர்களில் ஒருவர் ரேகா ஜூன்ஜூன்வாலா. இவர் வேறு யாருமில்ல, இந்தியாவின் வாரன் பஃபெட் என்று அழைக்கப்பட்டவரும், பிரபல முதலீட்டாளருமான மறைந்த ஜூன்ஜூன்வாலாவின் மனைவிதான் இவர். 2022 ஆகஸ்ட் மாதத்தில் உடல் நலக்குறைவு காரணமாக ஜூன்ஜூன்வாலா மறைந்தார். நிறுவன பங்குகளை தேர்வு செய்து முதலீடு செய்வதில் கணவருக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர் அல்ல ரேகா ஜூன்ஜூன்வாலா. உதாரணமாக, நேற்று ஒரே நாளில் மட்டும் டாடா குழுமத்தை இரண்டு நிறுவன பங்குகள் வாயிலாக சுமார் ரூ.900 கோடி லாபம் பார்த்துள்ளார்.

டைட்டன்
ரேகா ஜூன்ஜூன்வாலாவின் போர்ட்ஃபோலியாவில் டாடா குழுமத்தை சேர்ந்த டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய 2 நிறுவன பங்குகளும் உள்ளன. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக, பங்குச் சந்தையில் பங்குகள் அதிகளவில் விற்பனையான போதிலும், டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸ் பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. டைட்டன் நிறுவனத்தின் கடந்த மார்ச் காலாண்டுகள் சிறப்பாக இருந்ததால் இந்நிறுவன பங்கின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது.

ஒரே நாளில் ரூ.900 கோடி லாபம் பார்த்த ரேகா ஜூன்ஜூன்வாலா... எப்படி தெரியுமா..?

ஜூவல்லரி மற்றும் வாட்ச் தயாரிப்பு நிறுவனமான டைட்டன், கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.870 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 10.7 சதவீதம் அதிகமாகும். இந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.11 டிவிடெண்டு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் டைட்டன் கம்பெனி நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.38 சதவீதம் உயர்ந்து ரூ.3,510.80ல் நிலை கொண்டது.

லாபம்
இதன் காரணமாக, நேற்று டைட்டன் கம்பெனி லிமிடெட்டில் ரேகா ஜூன்ஜூன்வாலாவின் பங்குகளின் மொத்த மதிப்பு ரூ.15,402.40 கோடியிலிருந்து ரூ.16,165.09 கோடியாக உயர்ந்தது. ஆக, நேற்று ஒரே நாளில் மட்டும் டைட்டன் பங்கு வாயிலாக மட்டும் ரேகா ஜூன்ஜூன்வாலாவுக்கு ரூ.762.69 கோடி லாபம் கிடைத்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான தாராள வர்த்தக ஒப்பந்தத்தால் டாடா மோட்டார்ஸ் பலன் அடையும் என்று தகவல் வெளியானதால், நேற்று டாடா மோட்டார்ஸ் பங்கு விலை உயர்ந்தது. கார்கில் போர் சமயத்திலும் டாடா மோட்டார்ஸ் பங்கு விலை உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது டாடா மோட்டார்ஸ் பங்கு விலை சுமார் 92 சதவீதம் ஏற்றம் கண்டது. நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.90 சதவீதம் உயர்ந்து ரூ.708.50ல் முடிவுற்றது.

டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் பங்கு விலை உயர்வின் பலனாக, அந்நிறுவனத்தில் ரேகா ஜூன்ஜூன்வாலா வசம் உள்ள பங்குகளின் மொத்த மதிப்பு நேற்று ஒரே நாளில் ரூ.129.45 கோடி உயர்ந்து ரூ.3.386.91 கோடியாக அதிகரித்தது. கடந்த வியாழக்கிழமையன்று இது ரூ.3,257.45ஆக இருந்தது. ஆக, நேற்று ஒரே நாளில் டாடா குழுமத்தை சேர்ந்த டைட்டன் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய 2 நிறுவன பங்குகளில் வாயிலாக மட்டும் ரேகா ஜூன்ஜூன்வாலாவுக்கு மொத்தம் ரூ.892 கோடி லாபம் கிடைத்துள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்.. இந்த 3 பங்குகளை வாங்கி போடுங்க இதுதாங்க சரியான நேரம்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+