முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கச்சா எண்ணெய் முதல் சில்லரை வர்த்தகம் வரை பல்வேறு வணிகங்களில் கொடி கட்டி பறக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நேற்று தனது 2025 மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது.இதனையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மொத்த நிகர சொத்து மதிப்பில் (ஈக்விட்டி மதிப்பு) ரூ.10 லட்சம் கோடியை தாண்டிய முதல் இந்திய நிறுவனமாக மாறியது.
ஒரு நிறுவனத்தின் ஈக்விட்டி மதிப்பு (நிகர சொத்து மதிப்பு) என்பது நிறுவனத்தின் மொத்த சொத்துக்களுக்கும், அதன் மொத்த பொறுப்புகளுக்கும் இடையிலான வித்தியாசம். ஈக்விட்டி என்பது ஒரு நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பை குறிக்கிறது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இதற்கு முன் பங்குகளின் சந்தை மதிப்பில் ரூ.20 லட்சம் கோடியை எட்டிய முதல் நிறுவனம் என்ற பெருமையை பெற்றது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2025 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.19,407 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 2.4 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபமாக ரூ.18,951 கோடி ஈட்டியிருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் செயல்பாட்டு வாயிலான வருவாய் ரூ.2.6 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
2025 மார்ச் காலாண்டில் ரிலையன்ஸின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் பிரிவான ஜியோ ப்ளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் லாபம் 26 சதவீதம் உயர்ந்து ரூ.7,022 கோடி ஈட்டியுள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.26,120 கோடியாக உள்ளது. ஜியோ சந்தாதாரர்களின் எண்ணிக்கை 48.82 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2024 டிசம்பர் காலாண்டில் 48.21 கோடியாக இருந்தது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.3,545 கோடி ஈட்டியுள்ளது. மேலும் இந்நிறுவனம் புதிதாக 238 கடைகளை திறந்துள்ளது. இதனையடுத்து இந்நிறுவனத்தின் மொத்த கடைகளின் எண்ணிக்கை 19,340ஆக உயர்ந்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.12 சதவீதம் குறைந்து ரூ.1,300.05ஆக இருந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் குறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், பலவீனமான பெரிய பொருளாதார நிலைமைகள் மற்றும் மாறிவரும் புவிசார் அரசியல் களம் ஆகியவற்றுடன், 2024-25ம் நிதியாண்டு உலகளாவிய வணிக சூழலுக்கு ஒரு சவாலான ஆண்டாக இருந்தது. செயல்பாட்டு ஒழுக்கம், வாடிக்கையாளர்கள் மையமாகக் கொண்ட புதுமை மற்றும் இந்தியாவின் வளர்ச்சி தேவைகளை பூர்த்தி செய்தல் ஆகியவற்றில் நாங்கள் கவனம் செலுத்தியதால் இந்த ஆண்டில் ரிலையன்ஸ் நிலையான நிதி செயல்திறனை வழங்க உதவியது என்று தெரிவித்தார்.
அட எப்படி பார்த்தாலும் லாபம்தான்...குஷியில் ஜென்சார் டெக்னாலஜிஸ் முதலீட்டாளர்கள்..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications