சாஃப்ட்வேர் மற்றும் சேவைகள் வணிகத்தில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ஜென்சார் டெக்னாலஜிஸ். பிஎஸ்இ 500 இன்டெக்ஸில் இடம்பெற்றுள்ள இந்நிறுவனம் நேற்று தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. மேலும் தனது பங்குதாரர்களுக்கு ரொக்க பரிசு (டிவிடெண்ட்) குறித்த அறிவிப்பையும் வெளியிட்டது.
2025 மார்ச் காலாண்டில் ஜென்சார் டெக்னாலஜிஸ் நிறுவனம் வருவாயாக ரூ.1,359 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 2.5 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.1,326 கோடி ஈட்டியிருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.176 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகமாகும்.

ஜென்சார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, 2025 மார்ச் 31ம் தேதியுடன் நிறைவடைந்த நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு ரூ.2 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.11 (550 சதவீதம்) இறுதி டிவிடெண்டாக வழங்க பரிந்துரை செய்துள்ளது. இது நிறுவனத்தின் 62வது ஆண்டு பொதுக்குழு கூட்டத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்றும், டிவிடெண்டுக்கான பதிவு தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜென்சார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள் காரணமாக நேற்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 1.68 சதவீதம் உயர்ந்தது. இருப்பினும் வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 017 சதவீதம் குறைந்து ரூ.701.95ஆக இருந்தது.
ஜென்சார் டெக்னாலஜிஸ் நிறுவன பங்கு நீண்ட கால அடிப்படையில் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை 671.80 சதவீதம் பெருக்கியுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 113 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்நிறுவன பங்கின் விலை 162 சதவீதம் அதிகரித்துள்ளது.
குறுகிய காலத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களின் பணத்தை கரைத்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரையிலான காலத்தில் ஜென்சார் டெக்னாலஜிஸ் பங்கு விலை 6 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 3 மாதங்களில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 15.57 சதவீதம் குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த 2 வாரங்களில் இப்பங்கின் விலை 10.67 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் இப்பங்கின் விலை 7 சதவீதம் உயர்ந்துள்ளது.
பங்கு விலை உயர்ந்து வரும் வகையில் ஒரு லாபம் மற்றும் நிறுவனம் அறிவித்த டிவிடெண்ட் வாயிலாக ஒரு வருமானம் வருவது முதலீட்டாளர்களுக்கு டபுள் சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
இந்த காரணம் புதுசா இருக்குனே.. ஒரே நாளில் 6 சதவீதத்துக்கு மேல் சரிந்த ஸ்விக்கி பங்கு விலை
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications