நாட்டின் முன்னணி உணவு டெலிவரி சேவை நிறுவனங்களில் ஒன்று ஸ்விக்கி. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 6.12 சதவீதம் குறைந்து ரூ.320ஆக சரிவடைந்தது. கடந்த பிப்ரவரி 14ம் தேதிக்கு, பிறகு இன்றுதான் ஸ்விக்கி பங்கின் விலை ஒரே நாளில் இவ்வளவு பெரிய சரிவை சந்தித்துள்ளது.
2025 மே 12ம் தேதியன்று, ஸ்விக்கி நிறுவனத்தின் ஐபிஓவுக்கு முந்தைய பங்குதாரர்களின் லாக் இன் காலம் காலாவதியாக போகிறது. இதனால் இந்நிறுவனத்தின் ஐபிஓவுக்கு முந்தைய பங்குதாரர்கள் வெளியேற வாய்ப்புள்ளதாக சந்தையில் ஊக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனால் சமீபகாலமாக ஸ்விக்கி நிறுவன பங்கின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியின் விதிமுறைகளின்படி, புரோமோட்டர்கள் அல்லாத ஐபிஓவுக்கு முந்தைய முதலீட்டாளர்கள், பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு கட்டாயம் ஆறு மாத லாக் இன் காலத்திற்கு உட்பட்டவர்கள். அதாவது லாக் இன் காலத்தில் அவர்கள் பங்குச் சந்தையில் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது. லாக் இன் காலத்துக்கு பிறகு பங்குகளை விற்பனை செய்து கொள்ளலாம்.
உள்நாட்டு தரகு நிறுவனமான ஜேஎம் ஃபைனான்சியல் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், லாக் இன் காலம் முடிந்ததும், ஸ்விக்கியின் 83 சதவீத பங்குகள் முதல் முறையாக இரண்டாம் நிலை வர்த்தகத்துக்கு தகுதி பெறும் என்று தெரிவித்து இருந்தது. அதாவது மே 13ம் தேதி முதல் அந்த பங்குகள் முதல் வர்த்தகத்திற்கு கிடைக்கும்.
ஜேஎம் பைனான்சியல் நிறுவனம் ஸ்விக்கி நிறுவனத்துக்கு வாங்கலாம் என்ற தர மதிப்பீட்டை வழங்கியுள்ளது. மேலும் பங்கின் இலக்கு விலையை ரூ.500ஆக நிர்ணயம் செய்துள்ளது. அதேசமயம் மற்றொரு தரகு நிறுவனமான அம்பிட் கேபிட்டல் நிறுவனம் ஸ்விக்கி நிறுவனத்துக்கு விற்பனை மதிப்பீட்டை வழங்கியதுடன் பங்கின் இலக்கு விலையை ரூ.310ஆக கணித்துள்ளது. லாபத்தில் ஸ்விக்கி சோமேட்டோவை விட 6 முதல் 12 காலாண்டுகள் பின்தங்கியிருப்பதாக தரகு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
2024 டிசம்பர் 23ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஸ்விக்கி பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.617.00ஐ எட்டியது. அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது. கடந்த 7ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே ஸ்விக்கி நிறுவன பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்சமான ரூ.305.80க்கு சென்றது.
90 நாளில் 6.04 லட்சம் கார்கள்.. Q4 முடிவுகளில் ஏமாற்றிய மாருதி சுசுகி.. பங்கு ஒன்றுக்கு ரூ.135 டிவிடெண்ட்..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications