நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் மாருதி சுசுகி இந்தியா. இந்நிறுவனம் தனது 2025 மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த மார்ச் காலாண்டில மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.3,911 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 1 சதவீதம் குறைவாகும். 2024 மாா்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.3,952 கோடி ஈட்டியிருந்தது.
நிறுவனத்தின் லாபம் குறைந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. கடந்த ஆண்டின் மார்ச் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2025 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் குறைந்துள்ளபோதிலும், நிபுணர்களின் மதிப்பீட்டைக் காட்டிலும் நிகர லாபம் அதிகரித்துள்ளது. 2025 மார்ச் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.3.801 கோடி என்ற அளவில்தான் இருக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டு இருந்தனர்.

2025 மார்ச் காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் வருவாயாக ரூ.40,920 கோடி ஈட்டியுள்ளது. இது 2024 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 6.4 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் வருவாயாக ரூ.38,471 கோடி ஈட்டியிருந்தது. 2025 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு காலாண்டில் 6.04 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனை 3.5 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2024-25ம் நிதியாண்டுக்கு தனது பங்குதாரர்களுக்கு பங்கு ஒன்றுக்கு ரூ.135 இறுதி டிவிடெண்ட் வழங்க பரிந்துரை செய்துள்ளது. இது ஆண்டு பொதுக்கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது என நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின் மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு காரணமாக, இன்று காலையில் பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை ஏற்ற இறக்கம் நிலவியது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தத்தின் இடையே மாருதி சுசுகி இந்தியா பங்கின் விலை அதிகபட்சமாக 1.23 சதவீதம் உயர்ந்தது. இருப்பினும் பின்னர் படிப்படியாக பங்கின் விலை குறைந்தது. மதியம் 3.15 மணி அளவில் மாருதி சுசுகி இந்தியா பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.48 சதவீதம் குறைந்து ரூ.11,725ஆக இருந்தது.
மாருதி சுசுகி பங்கு விலையின் எதிர்பார்ப்பு குறித்து ஹென்செக்ஸ் செக்யூரிட்டீஸின் ஆராய்ச்சி பிரிவு தலைவர் மகேஷ் எம் ஓஜா கூறுகையில், மாருதி சுசுகி பங்கின் சப்போர்ட் விலை ரூ.11,600ஆக உள்ளது. சப்போர்ட் விலையை குறைந்தால் பங்கு விலை ரூ.11,200ஆக குறையக்கூடும். அதேசமயம், உயர்வு பக்கத்தில் மாருதி பங்கு விலை ரூ.11,940 என்ற தடை எதிர்கொள்கிறது. இதை தாண்டி உயர்ந்தால் பங்கு விலை ரூ.12,400ஐ தொடும் என்று எதிர்பார்க்கலாம் என்று தெரிவித்தார்.
ரூ.1 லட்சம் ரூ.4.72 கோடியாக மாறிய அதிசயம்.. டைனகான்ஸ் சிஸ்டம்ஸ் பங்கு உங்ககிட்ட இருக்கா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications