மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 54% உயரும் என கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகள் 2026ஆம் நிதியாண்டில் ரூ.4,495 வரை உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைத்திருப்பதாக கோல்மன் சாச்ஸ் தரகு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து மார்ச் 27ஆம் தேதி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் ஒரு பங்கின் மதிப்பானது 3% வரை உயர்வு கண்டது.

கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் 2026ஆம் நிதி ஆண்டில் தற்போதுள்ள விலையிலிருந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு 54% உயர்வு கண்டிருக்கும் என கணிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு நிறுவனம் மேற்கொண்டுள்ள பல்வேறு முதலீடுகள் மற்றும் டிஸ்னி நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் உருவாக்கி இருக்கக்கூடிய கூட்டு நிறுவனம் ஆகியவை காரணமாக இருக்கும் என கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜியோ டெலிகாம் போன்றவற்றில் ரிலையன்ஸ் நிறுவனம் செய்து வரும் மூலதன செலவினம் இந்த நிறுவனத்திற்கு நல்ல வருவாயை ஈட்டி தரும் என்றும் இது பாசிட்டிவான ஒரு அவுட்லுக் கொடுப்பதாகவும் கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது ரூ.4,495 என்ற உச்சத்தை எட்டும் என்றும் பேஸ் புள்ளியில் 3,400 என்ற அளவை எட்டும் என்றும் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் விரிவாக்கத்தால் அதற்கு கிடைக்க கூடிய வருவாய் மற்றும் புதிய தொழில்களில் செய்யும் முதலீடு ஆகியவற்றால் ரிலையன்ஸின் பங்குகள் இந்திய பங்குச்சந்தைகளை அவுட்பெர்ஃபார்ம் செய்யும் அளவிற்கு வளரும் என இந்த நிறுவனம் கணிப்பு வெளியிட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் மூலதன செலவினங்களுக்காக 125 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை ஹைட்ரோ கார்பன் மற்றும் டெலிகாம் துறைகள் ஆகும். இவை அடுத்த ஐந்தாண்டு காலங்களில் வருவாயை அள்ளித் தரும் என கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் தனது கணிப்பில் கூறியுள்ளது.
அதேபோல ரிலையன்ஸ் நிறுவனம் குறைந்த மூலதன செலவுகள் கொண்ட குறுகிய காலத்தில் அதிக வருவாய் தரக்கூடிய நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கான திட்டங்களை முன் வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறது.
இந்தியாவில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட் போன் பயன்பாட்டிற்கு மாறி இருப்பது மற்றும் பிராட்பேண்ட் சேவைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் பெட்ரோ கெமிக்கல் துறைகள் வளர்ச்சி ஆகியவை காரணமாகவும், டிஸ்னி நிறுவனத்துடன் உருவாக்கிய கூட்டு நிறுவனத்தின் மூலம் பெரும் லாபம் ஈட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் நிப்டி 50 இன் பெஞ்ச் மார்க்கை விட 1% அதிகமாக பெர்ஃபார்ம் செய்துள்ளது என இந்த நிறுவனம் கூறியுள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Devika
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications