சோதனைகளை சாதனையாக மாற்றும் அனில் அம்பானி.. கடன் இல்லாத நிறுவனமாக மாறிய ரிலையன்ஸ் இன்ஃப்ரா..!!

நம் நாட்டின் மெகா கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் இளைய சகோதரர் தான் அனில் அம்பானி. 20 ஆண்டுகளுக்கு முன்பு, முகேஷ் அம்பானியை காட்டிலும் இவர் தான் வணிகத்தில் கொடி கட்டி பறந்தார். ஆனால் தவறான முதலீடு, நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது போன்ற காரணங்களால் இன்று அனில் அம்பானியின் நிலை மோசமானது. ஆனாலும் மனுஷன் கொஞ்சம் கூட நம்பிக்கையை இழக்காமல் தொடர்ந்து தனது வர்த்தக நிறுவனங்களை வெற்றி பாதைக்கு திருப்பும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

புத்துயிர்
இதன் பலனாக அவரது சில நிறுவனங்கள் புத்துயிர் பெற தொடங்கியுள்ளன. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் பல கடனிலிருந்து விடுபட்டு, பல ஆண்டுகளுக்கு பிறகு லாபம் ஈட்டியுள்ளன. உதாரணமாக, அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் பவர் கடந்த நிதியாண்டில் லாபம் ஈட்டியுள்ளது. கடந்த 2024-25ம் நிதியாண்டில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் நிகர லாபமாக ரூ.2,947.83 கோடி ஈட்டியுள்ளது. தற்போது அந்த வரிசையில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் இடம் பிடித்துள்ளது.

சோதனைகளை சாதனையாக மாற்றும் அனில் அம்பானி.. கடன் இல்லாத நிறுவனமாக மாறிய ரிலையன்ஸ் இன்ஃப்ரா..!!

அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள முக்கியமான ஒரு நிறுவனம் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர். இந்நிறுவனம் மின்சாரம்,சாலைகள்,மெட்ரோ ரயில் மற்றும் பிற உள்கட்டமைப்பு துறைகளுக்கு பொறியியல் மற்றும் கட்டுமான சேவைகளை வழங்கி வருகிறது. மேலும், இந்நிறுவனம் அதன் சிறப்பு நோக்க பிரிவுகள் மூலம் பாதுகாப்பு துறை மற்றும் உள்கட்டமைப்பு பகுதிகளில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்துதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பதில் ஈடுபட்டுள்ளது.

லாபம்
ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் 2025 மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2025 மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் நிகர லாபமாக ரூ.4,387 கோடி ஈட்டியுள்ளது. செலவினங்களை குறைத்ததே இதற்கு முக்கிய காரணமாகும். 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.220.58 கோடியை இழப்பாக சந்தித்து இருந்தது.

2025 மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் வருவாயாக ரூ.8,274.87 கோடியாக உள்ளது. 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.298.73 கோடி ஈட்டியிருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் செலவினம் ரூ.4,828 கோடியாக குறைந்துள்ளது. 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனத்தின் செலவினம் ரூ.5,287 கோடியாக இருந்தது.

கடன் சுமை
2025 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து அதன் முழுமையான நிகரக் கடன் பூஜ்யமாக இருப்பதாக ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக கடந்த நிதியாண்டில் அம்பானி நிறுவனம் ரூ.3,300 கோடி கடன் சுமையை குறைத்துள்ளது. தற்போது ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக மாறியுள்ளது.

கடன் இல்லாத நிறுவனமான மாறியது மற்றும் மீண்டும் லாப பாதைக்கு திரும்பிய போன்ற காரணங்களால் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவன பங்கு முதலீட்டாளர்களை ஈர்த்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ரூ.307.05 வரை உயர்ந்தது.

10 மாதங்களில் 117% லாபம்.. பங்கு பிரிப்புக்கான பதிவு தேதியை அறிவித்த மல்டிபேக்கர் பங்கு..!!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+