ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி. இவர் ஒரு காலத்தில் இந்தியாவின் மெகா கோடீஸ்வரராக வலம் வந்தவர். ஆனால் தவறான முதலீடு, நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தது போன்ற காரணங்களால் இன்று பெரிய கடனாளியாக உள்ளார். இருப்பினும் வர்த்தக நிறுவனங்களை வெற்றி பாதைக்கு திருப்பும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அதன் பலனாக பல நிறுவனங்கள் வளர்ச்சிக்கு பாதைக்கு திரும்ப தொடங்கியுள்ளன.
நம்பிக்கை
மீணடும் வணிக உலகில் ஒரு கலக்கு கலக்கலாம் என்ற எண்ணத்தில் இருக்கும் அனில் அம்பானிக்கு பெரிய நம்பிக்கையாக இருப்பது ரிலையன்ஸ் பவர் நிறுவனம்தான். ரிலையன்ஸ் பவர் நிறுவனம் 2025 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.126 கோடி ஈட்டியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனத்துக்கு ரூ.397.56 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருந்தது. கடந்த மார்ச் காலாண்டில் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.2,066 கோடி ஈட்டியுள்ளது.

மேலும், ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கு புதிய வர்த்க ஒப்பந்தங்களும் குவிந்து வருகிறது. இதன் தாக்கம் அந்நிறுவன பங்குகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் பவர் நிறுவனம் புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளது என்ற செய்தி வெளியானதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகத்தின் இடையே ரிலையன்ஸ் பவர் பங்கின் விலை சுமார் 4 சதவீதம் உயர்ந்து ரூ.46.72 வரை சென்றது.
பூட்டான்
ரிலையன்ஸ் பவர் நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், பூட்டான் அரசாங்கத்துக்கு சொந்தமான முதலீட்டு பிரிவான ட்ரூக் ஹோல்டிங் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கிரீன் டிஜிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் நீண்ட கால மின் கொள்முதல் ஒப்பந்தத்திற்கான வணிக கால சீட்டில் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி, ரிலையன்ஸ் பவர் மற்றும் இஎச்ஐ ஆகியவை இணைந்து 50:50 கூட்டு முயற்சியில், 500 மெகாவாட் நிறுவனப்பட்ட திறன் கொண்ட பூட்டானின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டத்தை உருவாக்கும்.
பங்கு விலை
நடப்பு மே மாதத்தில் இதுவரை ரிலையன்ஸ் பவர் பங்கின் விலை கிட்டத்தட்ட 16 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டில் இந்நிறுவன பங்கின் விலை 77 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது. ரிலையன்ஸ் பவர் பங்கு குறித்து லட்சுமிஸ்ரீ இன்வெஸ்ட்மன்ட்ஸின் ஆராய்ச்சி தலைவர் அன்ஷுல் ஜெயின் கூறுகையில், இந்நிறுவன பங்கின் தினசரி, வாரந்திர மற்றும் மாதாந்திர நகரும் சராசரிகள் நேர்மறையாக சீரமைக்கப்பட்டு, ஏற்றமான கட்டமைப்பை வலுப்படுத்துகின்றன.
இப்பங்கின் விலை 48.5 என்ற எதிர்ப்பு நிலைக்கு மேல் சென்றால் பேர்ட்னை உறுதி செய்யும். மேலும் குறுகிய காலத்தில் 65 மண்டலத்தை நோக்கி பங்குகள் நகர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
அட தங்கம் இந்த அளவுக்கு குறையுமா..? இனி இறங்குமுகம்தான்... அடிச்சு சொல்லும் நிபுணர்கள்
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஓரே நாளில் 6.5 லட்சம் கோடி இழப்பு.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications