கடந்த ஆண்டு மத்தியிலிருந்து தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. கடந்த ஏப்ரலில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த ஏப்ரல் 22ம் தேதியன்று எம்சிஎக்ஸில் 10 கிராம் தங்கத்தின் விலை புதிய உச்சமான ரூ.99,358ஐ எட்டியது. அதன் பிறகு தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவியது. கடந்த 25 தினங்களில் தங்கத்தின் விலை கணிசமான சரிவை சந்தித்துள்ளது. தங்கத்தின் விலை அதன் உச்ச விலையிலிருந்து சுமார் 7 சதவீதம் குறைந்துள்ளது.
மூவிங் சராசரி
தங்கத்தின விலை தற்போது 50 நாள் மூவிங் சராசரியை விடக் கீழே முடிவடையும் அபாயத்தில் உள்ளது. பெரும்பாலான நிபுணர்கள் தங்கத்தின் விலை சரியவே வாய்ப்புள்ளது என்று கணித்துள்ளனர். 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.87,000-88,000 வரை குறையக்கூடும் என்று அவர்கள் கணித்துள்ளனர்.

ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் கூறுகையில், மே 16 முதல் மே 20 வரையிலான காலம், தங்கத்தின் விலை சாத்தியமான போக்குமாற்றங்களுக்கு முக்கிய காலகட்டமாக இருக்கும். சர்வதேச சந்தையில் 3,136 டாலர் ஒரு அத்தியாவசிய ஆதரவு அளவாக உள்ளது. விலைகள் இதற்கு கீழே இறங்கினால், அவை 2,875-2,950 வரம்பை நோக்கி செல்லக்கூடும். அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதக் குறைப்புகளுக்கான எதிர்பார்ப்புகள் குறைந்து வருவது, தங்கம் போன்ற பாதுகாப்பான முதலீடுகளுக்கான தேவையை பாதித்துள்ளது.
வர்த்தக போர்
வர்த்தக போர் தாக்கங்கள் குறித்த கவலைகள் குறைந்து, பத்திர வருமானம் அதிகரித்து தங்கத்தின் கவர்ச்சியை குறைத்துள்ளது. தங்கத்தின் வருமானம் குறைவதோடு, வட்டி விகிதங்களும் அதிகரித்து வருவதால், முதலீட்டு விருப்பமாக அதன் கவர்ச்சி குறைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.
ஆக்மாண்டின் ஆராய்ச்சி தலைவர் ரெனிஷா சைனானி கூறுகையில், தற்போதைய புவிசார் பிரச்சினைகள் மற்றும் சந்தை தேவை குறைவதால் தங்கத்தின் விலைகள் குறிப்பிடத்தக்க அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. ரஷ்யா-உக்ரைன் இடையிலான பேச்சுவார்த்தை வேகத்தில் ஏற்பட்ட மந்தநிலை, அமெரிக்க தரவுகள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவாக இருந்தது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான புகலிட சொத்துக்கு (தங்கம்) திரும்புவது போல் தோன்றியது.
ஒரு அவுன்ஸ்
இதனால் தங்கத்தின் விலை இன்ட்ராடே குறைந்த விலையிலிருந்து சுமார் 100 டாலர் உயர்ந்தது. தங்கத்தின் விலை 3,200 டாலர் (ஒரு அவுன்ஸ்) என்ற டபுள் நெக்லைன் ஆதரவை முறியடித்துள்ளதால், குறுகிய காலத்தில் தங்கத்தின் விலை 3,000-50 (ரூ.87,000-88.000) வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய போக்குகள் எதிர்மறையாக தோன்றினாலும், குறைந்த விலை புள்ளிகளில் நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வாயப்புகள் இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது என்று தெரிவித்தார்.
ரித்திசித்தி புல்லியன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரித்விராஜ் கோத்தாரி கூறுகையில், தங்கத்தின் விலைகள் நீண்ட கால அடிப்படைகள் அடிப்படையில் அப்படியே இருந்தாலும், அதன் விலை பாதையின் குறுகிய காலக் கண்ணோட்டம், பெரிய பொருளாதார மாற்றங்களுக்கு வினைபுரியக் கூடியதாகவே உள்ளது. விலை வீழ்ச்சி ஏற்பட்டால், பன்முகப்படுத்தப்பட்ட உத்தியுடன் சர்வதேச அளவில் என்ன நடக்கும் என்பதில் முதலீ்ட்டாளர்கள் இன்னும் குறிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.
சாத்தியம்
உலகளாவிய பொருளாதாரங்கள் விரைவான மீட்சிகளை காணத் தொடங்கினால், குறிப்பிடத்தக்க விலை சரிவுக்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தங்கத்தின் விலை 3,000 முதல் 3,050 வரம்புக்கு கீழே சரியக்கூடும் என்று தெரிவித்தார்.
இங்கிலாந்தை ஆட்டிப்படைக்கும் இந்தியர்.. கோபிசந்த் இந்துஜா சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

தங்கம் விலை: ஒரே நாளில் 2 முறை விலை சரிவு.. 1 கிராமுக்கு 1000 ரூபாய் சரிவு.. ஷாக் மேல ஷாக்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications