அனில் அம்பானி தலைமையிலான அனில் திருபாய் அம்பானி குழுமத்தை சேர்ந்த நிறுவனம் ரிலையன்ஸ் பவர். இந்நிறுவனம் மின் உற்பத்தி வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. டிரம்பின் வரி விதிப்பு பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் நிலவரம் ஏற்ற இறக்கமாக உள்ளது. அதேசமயம் கடந்த ஒரு மாதத்தில் ரிலையன்ஸ் பவர் பங்கு விலை சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
நிஃப்டி 50,பிஎஸ்இ சென்செக்ஸ், நிஃப்டி பேங்க் இன்டெக்ஸ் ஆகியவற்றை காட்டிலும் ஆல்பா ஆதாயத்தை ரிலையன்ஸ் பவர் கொடுத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் நிஃப்டி 50 1.60 சதவீதமும் ,பிஎஸ்இ சென்செக்ஸ் 1.52 சதவீதமும் , நிஃப்டி பேங்க் இன்டெக்ஸ் 6.13 சதவீதமும் மட்டுமே அதிகரித்து இருந்தது.

2020 மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் பவர் பங்கு விலை இதுவரை இல்லாத குறைந்தபட்சமாக ரூ.1ஆக சரிந்தது. இருப்பினும் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் காண தொடங்கியது. தற்போது இப்பங்கின் விலை ரூ.40ஆக உள்ளது. இருப்பினும் ஒரு காலத்தில் ரிலையன்ஸ் பவர் பங்கு விலை ரூ.375ல் வர்த்தகமானது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பார்த்தால் இப்பங்கு ஒரு பெரிய இழப்பை ஈடுசெய்ய வேண்டும்.
ரிலையன்ஸ் பவர் பங்குகளை போர்ட்போலியாவில் வைத்திருப்பவர்கள், அதிக வருமானத்துக்காக இந்த பங்கினை தொடர்ந்து வைத்திருக்க வேண்டுமான என்பதை அறிய ஆர்வமாக இருப்பார்கள். இது தொடர்பாக நிபுணர்கள் கூறுகையில், அதிக கடன் காரணமாக ரிலையன்ஸ் பவர் நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் நிறுவனம் அண்மையில் அதன் கடனை குறைக்க நடவடிக்கை எடுத்தது. ரிலையன்ஸ் கேபிட்டலை ஐஐஎச்எல் நிறுவனத்துக்கு விற்றதையடுத்து அதன் கடன் பங்கு விகிதம் மேம்பட்டது.
2024 செப்டம்பர் காலாண்டில் ரிலையன்ஸ் பவர் நிகர லாபமாக ரூ.2,878 கோடி ஈட்டியது. இது முக்கியமாக அதன் துணை நிறுவனமான விதர்பா இண்டஸ்ட்ரீஸ் பவர் லிமிடெட்டை பிரித்தன் மூலம் கிடைத்த ரூ.3.000 கோடி விதிவிலக்கான வருமானத்தால் இயக்கப்பட்டது. கடந்த வெள்ளி்க்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் முடிவில் ரிலையன்ஸ் பவர் பங்கு விலை ரூ.40.04ஆக இருந்தது.
ரிலையன்ஸ் பவர் பங்குகளை வைத்திருப்பவர்கள் ரூ.48-52 என்ற குறுகிய கால இலக்கை எட்டும் வரை பங்குகளை தக்கவைத்து கொள்ள வேண்டும். அதேசமயம் புதிதாக இப்பங்குகளில் முதலீடு செய்பவர்கள் மேற்கூறிய குறுகிய கால இலக்குகளுக்கு பங்குகளை வாங்க தொடங்கலாம். அதேசமயம், புதிதாக பங்குகளை வாங்குபவர்கள் கட்டாயம் ரூ.36 என்ற ஸ்டாப் லாஸை பராமரிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தினர்.
அம்பானி டூ பிர்லா வரை: வாரிசு கைக்கு வந்த சாம்ராஜ்ஜியங்கள்..! இனி ஆட்டம் வேற லெவல்..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications