இந்திய பங்குச் சந்தையில் ஒரு சிறிய நிறுவனம் கடந்த 20 மாதங்களில் 55,000 சதவீதம் உயர்ந்து உலகளாவிய முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. RRP செமிகண்டக்டர் என்ற இந்த நிறுவனத்தின் பங்கு விலை டிசம்பர் 17, 2025 வரையில் தடாலரியாக உயர்ந்தது. ஒரு பில்லியன் டாலர் மதிப்புக்கு மேல் உள்ள நிறுவனங்களில் இவ்வளவு பெரிய வளர்ச்சி இதுவரையில் எந்தொரு நிறுவனமும் பதிவு செய்தது கிடையாது என்பதை இதன் தனி சிறப்பு.
உலகளவில் AI மற்றும் செமிகண்டக்டர் துறை மீது முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக இருப்பது என்னவோ உண்மை தான், ஆனால் RRP செமிகண்டக்டர் நிறுவனத்தில் நடந்த விஷயமே வேறு. இந்நிறுவனம் நஷ்டத்தில் உள்ளது, செமிகண்டக்டர் உற்பத்தியில் பெரிய முன்னேற்றம் இல்லை ஆயினும் இந்நிறுவனத்தின் பங்குகள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிறுவனத்தின் வளர்ச்சி என்பது சாமானிய முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. ஏன் தெரியுமா..?

நிறுவனத்தின் உண்மை நிலை:
RRP செமிகண்டக்டர் நிறுவனம் செமிகண்டக்டர் உற்பத்தி எதுவும் தொடங்கவில்லை. இந்நிறுவனத்தில் வெறும் இரண்டு முழுநேர ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். செப்டம்பர் காலாண்டில் ரூ.6.82 கோடி வருவாய் சரிவு, ரூ.7.15 கோடி நிகர இழப்பும் ஏற்பட்டது. 2024 தொடக்கத்தில் ரியல் எஸ்டேட் துறையில் இருந்து செமிகண்டக்டருக்கு மாறியது. ரூ.440 கோடி ஆர்டர் ரத்தானதால் வருவாய் குறைந்துள்ள இப்படி இந்நிறுவனத்தின் அடிப்படை சற்றும் இல்லாமல் உள்ளது. ஆயினும் பங்கு விலை உயர்ந்துள்ளது.
பங்கு உயர்வுக்கு காரணம்:
இத்தகைய மோசமான சூழ்நிலையிலும் பங்கு விலை 20 மாதத்தில் 55,000% உயர்ந்துள்ளது. இந்த பங்கு உயர்வுக்கு சமூக ஊடகங்கள், ஆன்லைன் ஹைப் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் 98 சதவீத பங்குகளை Rajendra Chodankar மற்றும் அவரது கூட்டாளிகளிடம் மட்டுமே வைத்துள்ளனர். இந்த கூட்டாளிகள் RRP செமிகண்டக்டர் நிறுவனத்துடன் தொடர்புடைய ஆர்ஆர்பி டிஃபென்ஸ், இந்தியன் லிங்க் செயின் உற்பத்தியாளர்கள், ஆர்ஆர்பி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆர்ஆர்பி எஸ்4இ இன்னோவேஷன் நிறுவனத்துடன் தொடர்புடையவர்கள் என பங்குச்சந்தைக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் ரீடைல் சந்தையில் வர்த்தகத்துக்கு கிடைக்கும் பங்குகள் மிகக் குறைவு. இதனால் சிறிய அளவிலான பங்கு கைமாற்றம் கூட பெரிய அளவில் விலையை உயர்த்தும். இதன் விளைவாக 149 நாட்கள் தொடர்ச்சியாக அப்பர் சர்க்யூட் அடித்தது RRP செமிகண்டக்டர் பங்குகள்.
அக்டோபர் மாதம் பங்குச் சந்தை இந்நிறுவனம் பங்கு வளர்ச்சி மீது எச்சரிக்கை விடுத்த போதும், ஒரு வருடம் கடுமையான கண்காணிப்புக்கு கீழ் இருந்த போதும் இதன் பங்கு விற்பனை தொடர்ந்தது, அதன் விலையும் அதிகரித்து வந்தது.
இன்த நிலையில் செப்டம்பர் மாதம் SEBI அமைப்பு RRP செமிகண்டக்டர் பங்கு வர்த்தகத்திலும், நிர்வாகத்திலும் முறைகேடு உள்ளதா என்று விசாரிக்க தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் மதிப்பு உச்சத்தில் இருந்த போது ரூ.14,000 கோடி மதிப்பு கொண்டதாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 20ஆம் தேதி வெறும் 20 ரூபாய்க்கு வர்த்தகமான இந்த பங்கு 11,902.00 ரூபாய் என்ற 52 வார உயர்வை பதிவு செய்து தற்போது 11,094.95-யில் நிற்கிறது.
தற்போது செபியின் கட்டுப்பாடுகள் காரணமாக RRP செமிகண்டக்டர் பங்குகள் வாரத்துக்கு ஒரு முறை மட்டுமே வர்த்தகம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 7 உச்சத்திலிருந்து தற்போது 6 சதவீதம் குறைந்துள்ளது. செபி தனது விசாரணையில் RRP செமிகண்டக்டர் நிறுவனத்தின் புரமோட்டர் பதவி விலகல், CFO ராஜினாமா போன்றவை சந்தேகத்தை அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
முதலீட்டாளர்களுக்கு பாடம்:
RRP செமிகண்டக்டர் கதை முதலீட்டாளர்களுக்கு பெரிய பாடம். எப்போதும் பங்கு விலை உயர்வு நிறுவன வலிமையை காட்டாது. AI, செமிகண்டக்டர் போன்ற டிரெண்டுக்கு பின்னால் செல்வது ஆபத்து நிறைந்தது. முதலீடு செய்யும் போது எப்போதும் ஒரு நிறுவனத்தின் நிதி நிலை, வருவாய், செயல்பாடு ஆகியவை முக்கியமானதாக வைத்து ஆய்வு செய்த பின்னரே முதலீடு செய்ய வேண்டும்.
இதுப்போன்ற பென்னி ஸ்டாக் அவ்வபோது ஜாக்பாட் கொடுக்கும், ஆனால் இதை நம்பி இதேபோன்று இருக்கும் மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்வோருக்கு எப்போதும் ஆபத்து இருக்கும். மேலும் சமூக ஊடகங்களில் அவ்வபோது கிளம்பும் ரூமர்களை நம்பி எப்போதும் முதலீடு செய்யாதீர். நீண்டகால முதலீட்டுக்கு அடிப்படை ஆய்வு அவசியம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications