Genus Power Infrastructures Ltd நிறுவனப் பங்குகள் கடந்த மூன்று ஆண்டுகளில் மல்ட்டிபேக்கராக மாறியது. 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதியன்று இந்த எலக்ட்ரிகல் எக்யூப்மென்ட் நிறுவன பங்கு ரூ.26.15 முடிவடைந்தது. பிஎஸ்இ-யின் நடப்பு வர்த்தகத்தில் 949 சதவீதம் பங்கின் விலை அதிகரித்து அப்பர் சர்க்கீயூட்டில் 5 சதவீதம் உயர்ந்து ரூ.271.60 ஆக உள்ளது.
ஜீனஸ் பவர் ஸ்டாக் பங்கின் விலை 205 சதவீதம் 2023 ஆம் ஆண்டில் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் மொத்தம் 1.52 லட்சம் பங்குகள் கைமாறி, பிஎஸ்இயில் ரூ.3.89 கோடி விற்றுமுதல் ஈட்டியுள்ளது. பிஎஸ்இயில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.6666 கோடியாக உயர்ந்துள்ளது.

ஆகஸ்ட் 29, 2023 அன்று 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 277 ஆகவும், அக்டோபர் 17, 2022 அன்று 52 வாரங்களில் குறைந்தபட்சமாக ரூ.76.50 ஆகவும் இருந்தது. டெக்னிக்குகளைப் பொறுத்தவரை, ஜீனஸ் பவரின் ரிலேடிவ் ஸ்ட்ரெங்க்த் இண்டெக்ஸ் (RSI) 67.9 ஆக உள்ளது.
ஜீனஸ் பவர் ஸ்டாக் ஒரு வருட பீட்டா 1.4 ஐக் கொண்டுள்ளது, இது அந்தக் காலகட்டத்தில் அதிக ஏற்ற இறக்கத்தைக் குறிக்கிறது. இந்த பங்கு 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் நகரும் சராசரியை விட அதிகமாக வர்த்தகம் செய்யப்படுகிறது.
ஜீனஸ் பவர் ஜூன் 2023 காலாண்டில் ரூ. 280.1 கோடி வருவாயைப் பெற்றுள்ளது. இது ஒரு வருடத்துக்கு முன்பு இதே காலாண்டில் ரூ.197.1 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.11.9 கோடியாக இருந்த லாபம், முதல் காலாண்டில் ரூ.23.1 கோடியாக உயர்ந்துள்ளது.
முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.14.3 கோடியாக இருந்த ஆபரேட்டிங் ப்ராபிட் முதல் காலாண்டில் ரூ.28.5 கோடியாக உயர்ந்துள்ளது. FY23 இல், நிகர லாபம் 21.8 கோடி ரூபாயில் இருந்து ரூ.35 கோடியாக உயர்ந்துள்ளது.
மார்ச் 2022ல் முடிவடைந்த நிதியாண்டில் ரூ.711.9 கோடியாக இருந்த செயல்பாடுகளின் வருவாய் கடந்த நிதியாண்டில் ரூ.826.8 கோடியாக உயர்ந்துள்ளது. ஜீனஸ் பவரின் மொத்த ஆர்டர் புத்தகம், ஆகஸ்ட் 2023 இல் ஆர்டர் வரவுகள் உட்பட தற்போது ரூ.8,200 கோடிக்கு மேல் உள்ளது.
ஜீனஸ் பவர் முதன்மையாக மீட்டரிங் மற்றும் மீட்டரிங் சொல்யூசன்களை உற்பத்தி செய்தல்/வழங்குதல் மற்றும் ஆயத்த தயாரிப்பு அடிப்படையில் பொறியியல், கட்டுமானம் மற்றும் ஒப்பந்தங்களை மேற்கொள்கிறது. இந்த நிறுவனம் இரண்டு பிரிவுகளில் செயல்படுகிறது: மீட்டரிங் பிசினஸ் மற்றும் ஸ்ட்ராட்ஜிக் முதலீட்டு செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபடுகிறது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications