இந்திய பங்கு சந்தைகள் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. முடிவிலும் ஏற்றத்தில் தான் காணப்பட்டது.
சென்செக்ஸ் 952.97 புள்ளிகள் அல்லது 1.59% அதிகரித்து, 60,853.34 புள்ளிகளாகவும், நிஃப்டி 266.3 புள்ளிகள் அல்லது 1.49% அதிகரித்து, 18,125.75 புள்ளிகளாகவும் காணப்படுகிறது.
இன்றைய வர்த்தக அமர்வில் பி.எஸ்.இ கன்சியூமர் டியூரபிள் குறியீட்டினை தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இன்டெக்ஸ் நிலவரம்/
பிஎஸ்இ டெக் மற்றும் நிஃப்டி ஐடி குறியீடானது 2% மேலாக ஏற்றத்தில் காணப்பட்டது. நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ ஹெல்த்கேர், பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ ஆயில் & கேஸ், நிஃப்டி பிஎஸ்இ 1% மேலாகவும், மற்ற அனைத்து குறியீடுகளும் 1 % கீழாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.
தொடக்கம்
இன்று காலை தொடக்கத்திலேயே இந்திய பங்கு சந்தையானது ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ்274.16 புள்ளிகள் அதிகரித்து, 60,174.53 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 89.50 புள்ளிகள் அதிகரித்து, 17,949 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1807 பங்குகள் ஏற்றத்திலும், 399 பங்குகள் சரிவிலும், 122 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது. இது ப்ரீ ஓபனிங் சந்தையிலும் ஏற்றத்தில் தான் காணப்பட்டது.
ரூபாய் மதிப்பு
இந்திய ரூபாயின் மதிப்பானது டாலருக்கு எதிரான 43 பைசா அதிகரித்து, 82.29 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது கடந்த வெள்ளிக்கிழமையன்று 82.72 ரூபாயாக முடிவுற்றது. இது மேற்கொண்டு அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
எவ்வளவு ஏற்றம்?
இதற்கிடையில் பி.எஸ்.இ-யில் சந்தை மதிப்பானது சுமார் 3 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து இந்திய சந்தையில் அன்னிய முதலீடானது அதிகரித்து வரும் சூழலில், இது இந்திய சந்தையானது ஏற்றம் காண வழிவகுக்கலாம். இது வரவிருக்கும் நாட்களில் இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிட்டதட்ட ரூ.3 லட்சம் கோடி
பி.எஸ்.இ-யில் உள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பானது, 2.96 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 282.71 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த அமர்வில் 279.75 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதில் முன்னணி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
1 வருட உச்சத்தில் 101 பங்குகள்
இன்றைய சந்தை அமர்வில் 101 பங்குகள் 52 வார அதிகபட்ச விலையை எட்டியுள்ளதாகவும், அப்போட் இந்தியா, ஐடிபிஐ வங்கி, ஜிண்டால் ஸ்டீல் மற்றும் 98 பங்குகள் 1 வருட உச்சத்தில் காணப்படுகின்றது. இன்று 24 பங்குகள் ஒரு வருட குறைந்தபட்ச விலையை எட்டியுள்ளது.
முடிவு எப்படி?
தொடக்கத்திலேயே ஏற்றத்தில் தொடங்கிய சந்தையானது, முடிவிலும் ஏற்றத்தில் தான் முடிவடைந்துள்ளது. இதே சென்செக்ஸ் 846.94 புள்ளிகள் அதிகரித்து, 60,747.31 புள்ளிகளாகவும் முடிவடைந்தது. இதே நிஃப்டி 241.75 புள்ளிகள் அதிகரித்து, 18,101.20 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. முடிவிலும் அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்திலேயே முடிவடைந்துள்ளன.
இதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 36 பைசா அதிகரித்து, 82.36 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வில் 82.72 ரூபாயாக முடிவடைந்திருந்தது.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications