அமெரிக்கப் பெடரல் வங்கிக்குப் போட்டியாக இந்திய ரிசர்வ வங்கியும் வட்டி விகிதத்தை உயர்த்துவதற்காக இரு மாத நாணய கொள்கை கூட்டத்தை நேற்று துவங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சரிவில் இருந்து மீண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.
இந்த நிலையில் நேற்று வர்த்தக வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவாக 81.94 ரூபாய் வரையில் சரிந்துள்ளது. இதற்கு முன்பு ரூபாய் மதிப்பு 81.90 ரூபாய் அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் மும்பை பங்குச்சந்தையும் 6 நாளாகச் சரிந்து நிலையில் இன்று தப்பித்துள்ளது. இதேபோல் ரூபாய் மதிப்பும் 35 பைசா அதிகரித்து 81.58 ஆக உயர்ந்துள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி
இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 413.43 புள்ளிகள் உயர்ந்து 57,011.71 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 130.25 புள்ளிகள் உயர்ந்து 16,988.85 புள்ளிகளை எட்டியுள்ளது. மேலும் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ், ஏசியன் பெயின்ட்ஸ் தவிர அனைத்தும் உயர்வுடன் உள்ளது.
மும்பை பங்குச்சந்தை
புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனை காரணமாக டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாற்று சரிவை பதிவு செய்து 509 புள்ளிகள் சரிந்து 56,598 புள்ளிகளில் முடிவடைந்தது.
ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டம்
இதேபோல் நிஃப்டி குறியீடு 149 புள்ளிகள் சரிந்து 16,859 புள்ளிகளை எட்டியது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகளை வெளியிடும் காரணத்தால் வியாழக்கிழமை காலை வர்த்தகத்தில் முதலீட்டாளர்கள் நம்பிக்கை உடன் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.
செப்டம்பர் 20 முதல்
செப்டம்பர் 20 முதல் சென்செக்ஸ் குறியீடு அன்னிய முதலீட்டாளர்களின் தொடர் பங்கு விற்பனை காரணமாகச் சுமார் 3120 புள்ளிகளை இழந்துள்ளது. இக்காலகட்டத்தில் அன்னிய நேரடி முதலீட்டாளர்கள் சுமார் 15,560 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
More From GoodReturns

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications