இந்திய பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில் , கடந்த ஆண்டில் பெரிய லாபம் தந்த மூலதன பொருட்கள் நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்துள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் கவனம் அவற்றின் மீது திரும்பியுள்ளது.
எஸ்&பி-இன் மும்பை பங்குச்சந்தையில் மூலதன பொருட்கள் பட்டியலில் உள்ள 27 பங்குகள், எஸ்&பி-இன் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸை விட மூன்று மடங்கு அதிக லாபம் தந்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது. இந்த 27 பங்குகளில் 7 பங்குகள் சுமார் 458% லாபம் தந்துள்ளன.

எஸ்&பி-இன் மும்பை பங்குச்சந்தை மூலதன பொருட்கள் பட்டியலில் உள்ள பங்குகள் 2024ஆம் நிதியாண்டில் 64% லாபம் தந்துள்ளன. குறிப்பாக 7 நிறுவனங்கள் பெருமளவு வளர்ச்சி கண்டுள்ளன.
டிரான்ஸ்ஃபார்மர்ஸ் & ரெக்டிஃபையர்ஸ் நிறுவனம்: இது கடந்த ஓராண்டில் மட்டும் 458% லாபம் தந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் இந்நிறுவனம் 371 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த பங்கின் 52 வார கால உச்சம் 397 ரூபாய், தற்போது 329 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
சில்சார் டெக்னாலஜிஸ் : இந்த நிறுவனம் ஓராண்டில் 381% லாபம் தந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் 4ஆவது காலாண்டில் இந்நிறுவனம் 121 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. இந்த பங்கின் 52 வார கால உச்சம் 4,514 ரூபாய், தற்போது 3,938.60 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
அத்வைத் இன்பிராடெக்: இந்த நிறுவனம் ஓராண்டு காலத்தில் முதலீட்டாளர்களுக்கு 330% லாபம் தந்துள்ளது. இதன் 52 வார கால உச்சப்பட்ச விலை 1,618 ரூபாய், இது தற்போது 1,250 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
ஹெச்பிஎல் எலக்ட்ரிக்& பவர்: இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஓராண்டில் 244 % அதிகரித்துள்ளது. இதன் 52 வார கால உச்சம் 396.80 ரூபாய் தற்போது 299.95 ரூபாய்க்கு கிடைக்கிறது.
பெல்: அரசு நிறுவனமான பெல் முதலீட்டாளர்களுக்கு ஓராண்டில் 221% லாபம் தந்துள்ளது. இதன் 52 வார கால உச்சபட்ச விலை 275.85 ரூபாய் , ஆனால் தற்போது 216.75 ரூபாய்க்கே கிடைக்கிறது.
சங்க்வி மூவர்ஸ்: இந்த நிறுவனமும் முதலீட்டாளர்களுக்கு ஓராண்டில் 188% லாபம் தந்துள்ளது. இது 52 வார கால உச்ச விலையான 1,254 ரூபாயில் இருந்து குறைந்து 1,015 ரூபாய்க்கு வர்த்தகமாகிறது.
ஆக்சன் கன்ஸ்டிரக்சன் எகிப்மெண்ட்: இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 166% என உயர்வு கண்டுள்ளது. இந்த நிறுவன பங்கின் 52 வார கால உச்சம் 1,489 ரூபாய், அதுவே தற்போது 1,205 ரூபாய் என வர்த்தகமாகிறது.
தற்போது இந்த நிறுவன பங்குகள் குறைந்திருப்பதால் நீண்ட கால முதலீடாக வாங்கி வைப்பது சிறந்தது என முதலீட்டாளர்கள் பரிந்துரை செய்கின்றனர்.
Story Written by: Devika
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications