மும்பை: பங்குச்சந்தை முதலீடுகளில் சில நிறுவனங்களின் பங்குகளை நீண்ட காலத்திற்கு வைத்திருக்கும் போது அது பெரிய அளவிலான லாபத்தை ஈட்டி தரும். அப்படிப்பட்ட ஒரு மல்டி பேக்கர் பங்கு குறித்து தான் இந்த கட்டுரையில் நாம் பார்க்க இருக்கிறோம். இந்த பங்கு நான்கு ஆண்டுகளில் 700 சதவீத லாபத்தை அள்ளித் தந்துள்ளது.
சாக்குமா எக்ஸ்போர்ட்ஸ்(Sakuma exports) கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த ஸ்மால் கேப் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது 3 ரூபாயில் இருந்து 27.50 ரூபாய் என்ற அளவை எட்டியுள்ளது. முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட 700 சதவீத லாபத்தை இந்த நிறுவனம் பெற்று தந்துள்ளது. இந்த ஒரு மாத காலத்தில் மட்டும் நிறுவனத்தின் பங்குகள் 10% உயர்ந்துள்ளதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சாக்குமா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு கடந்த ஆறு மாதங்களில் 16 ரூபாயில் இருந்து 27 ரூபாய் என உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 70 சதவிகிதம் அதிகமாகும்.
இந்த நிறுவனம் தங்களுடைய நிதி நிலைமையை சீராக வைத்திருப்பது மட்டுமின்றி தங்களுடைய தொழிலை விரிவு படுத்தி வருவதும் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கிறது என பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த ஓராண்டு காலத்தில் மட்டும் ஒரு பங்கின் மதிப்பு 12 ரூபாயில் இருந்து 27 ரூபாய் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. இது 125 சதவீதம் அதிகம்.
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சாக்குமா எக்ஸ்போர்ட் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு 3 ரூபாய். கொரோனாவுக்கு பிந்தைய காலத்தில் பல்வேறு ஸ்மால் கேப் நிறுவனங்களும் நல்ல வளர்ச்சியை கண்டு வருகின்றன. அதில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்துள்ளது சாக்குமா எக்ஸ்போர்ட்ஸ்.
அண்மையில் கூட இந்நிறுவனம் பிரிட்டனில் கிளை நிறுவனத்தை தொடங்கி அதில் 7.1 மில்லியன் யூரோக்களை முதலீடு செய்துள்ளது. சாக்குமா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளுக்கு விவசாயம் சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
வேளாண் பொருட்களான சர்க்கரை, எண்ணெய் வித்துக்கள், பருப்பு. பருத்தி மற்றும் இந்தியாவில் பிரத்தியேகமாக கிடைக்கக்கூடிய பயிர் வகைகள் ஆகியவற்றை மொத்தமாக வாங்கி அதனை சந்தைப்படுத்துவது, ஏற்றுமதி செய்வது என அனைத்து வேலைகளையும் செய்கிறது.
இந்த நிறுவனம் இந்தியா ,மத்திய கிழக்கு நாடுகள், தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது. வேளாண் பொருட்களுடன், பெட்ரோ கெமிக்கல் , பெட்ரோலியம் மற்றும் மினரல் ஆகியவற்றுக்கான விநியோக சங்கிலி மேலாண்மையிலும் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் 889 கோடி ரூபாய் ஆகும். ஃபேஸ் வேல்யூ 1 ஆகவும், புக் வேல்யூ 20.75 ஆகவும் இருக்கிறது. 2023 ஆம் ஆண்டில் 3, 180 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. நிறுவனத்தின் லாபம் 2023 ஆம் ஆண்டில் 28 கோடி ரூபாயாக உள்ளது. நிறுவனத்தின் நிகர மதிப்பு 2023இல் 413 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தில் 61% பங்குகளை புரமோட்டர்களே வைத்துள்ளனர் 37 % பங்குகள் சில்லறை முதலீட்டாளர்கள் வசம் இருக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!



Click it and Unblock the Notifications