2024 செப்டம்பர் இறுதி முதல் கடந்த பிப்ரவரி வரையிலான 5 மாதங்களும் பங்குச் சந்தைகள் தொடர் சரிவை சந்தித்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால் சர்வதேச அளவில் வர்த்தக போர் வெடிக்கும் என்ற அச்சம், அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்தது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, தங்கம் விலை உயர்வு போன்ற சர்வதேச நிலவரங்களால் இந்திய பங்குச் சந்தைகள் அடி மேல் அடி வாங்கின.
இவ்வளவுக்கும், மத்திய அரசின் பட்ஜெட் அனைவரையும் கவரும் வகையில் இருந்தது, ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது போன்ற சாதகமான அம்சங்கள் காணப்பட்டபோதிலும், பங்குச் சந்தைகள் மரண அடி வாங்கின. இந்த ஆண்டில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் 1,500 கோடி டாலருக்கும் அதிக மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தனர். இந்திய பங்குச் சந்தைகளின் கடும் சரிவு சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில், கடந்த வாரம் பங்குச் சந்தைகளில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமையோடு நிறைவடைந்த கடந்த வாரத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,134 புள்ளிகள் அல்லது 1.54 சதவீதம் ஏற்றம் கண்டது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 427 புள்ளிகள் அல்லது 1.93 சதவீதம் உயர்வு கண்டது. இது பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரிய ஆறுதலை கொடுத்தது. இந்நிலையில், அடுத்த 2 மாதங்களுக்குள் பங்குச் சந்தை சரிவிலிருந்து மீண்டு விடும் என்ற நிபுணர் ஒருவர் தெரிவித்து இருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரிய சந்தோஷம் மற்றும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.
ஹீலியோஸ் கேபிட்டல் நிறுவனத்தின் நிறுவனர் சமீர் அரோரா கூறுகையில், இந்திய பங்குச் சந்தைகள் அடுத்த 1 முதல் 2 மாதங்களில் சரிவிலிருந்து மீண்டு விடும். அதன் பிறகு சந்தைகள் 5 முதல் 7 சதவீதம் வரை அல்லது 10 சதவீதம் வரை ஏற்றம் காணும். அதேசமயம் பங்குச் சந்தையின் எழுச்சி V வடிவத்தில் இருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் இது போன்ற எழுச்சிக்கு அரசாங்கத்தின் தலையீடு தேவைப்படும். கரடி பிடியில் அல்லது வீழ்ச்சியின் பாதிப்பில் 10 சதவீத பங்குகளில் மட்டுமே உள்ளது. அப்படியென்றால் 90 சதவீதம் சந்தை நன்றாக உள்ளது என்றுதான் அர்த்தம் என்று தெரிவித்தார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications