2024 செப்டம்பர் இறுதியில் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. ஆனால் அதன் பிறகு கடந்த பிப்ரவரி வரையிலான 5 மாதங்களாக பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவை சந்தித்தன. அன்னிய முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தது, சர்வதேச பொருளாதார மந்தநிலை குறித்த கவலைகள், தங்கம் விலை உயர்வு, அமெரிக்க பத்திரங்களில் அதிக வருமானம், புவிசார் அரசியல் பதற்றம், டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைகள் போன்ற சர்வதேச காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன.
நடப்பு மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் இந்திய பங்குச் சந்தைகள் கொஞ்சம் ஏற்றத்தை சந்தித்தன. கடந்த வெள்ளிக்கிழமை வரையிலான கடந்த 4 வர்த்தக தினங்களில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன பங்குளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.4.16 லட்சம் கோடி உயர்ந்தது. குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பங்குச் சந்தைகள் தற்போது அதன் உச்சத்திலிருந்து சுமார் 14 சதவீதம் பின்தங்கியே உள்ளது. பங்குச் சந்தைகள் தொடர்ந்து அடி மேல் வாங்குவது முதலீட்டாளர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன் நடந்த மோசமான பங்குச் சந்தை வீழ்ச்சிகள் போல் இதுவும் இருக்குமோ என்ற கலக்கத்தில் உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், முந்தைய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியை காட்டிலும் தற்போதைய பங்குச் சரிவு வேறுபட்டது என்று பிரபல நிபுணர் ஒருவர் தெரிவித்தார். ஹீலியோஸ் கேபிட்டலின் நிறுவனரும் தலைமை முதலீட்டு அதிகாரியுமான சமீர் அரோரா கூறுகையில், தற்போதைய பங்குச் சந்தை சரிவு 2000 மற்றும் 2008ம் ஆண்டுகளின் பங்குச் சந்தைகளின் வீழ்ச்சியிலிருந்து அடிப்படையில் வேறுபட்டது. பொருளாதார நெருக்கடி, அன்னிய செலாவணி தளர்வு மற்றும் முறையான நிதி அதிர்ச்சிகளால் முன்பு பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி கண்டன.
ஆனால் இந்த முறை எந்தவொரு துறையிலும் அதிகப்படியான மற்றும் வீணான முதலீடுகள், வேலை இழப்புகள், சொத்து விலை சரிவுகள், யாராலும் தேவையை தணிக்கும் திறன் அல்லது வாராக் கடன் அதிகரிப்பு போன்ற எதுவும் இல்லை. எனவே தற்போதைய பங்குச் சந்தையின் சரிவு, ஒட்டு மொத்த உண்மையான பொருளாதார பாதிப்பு இல்லாமல் ஒரு குழு நிறுவனங்களின் மதிப்பீட்டு திருத்தம் மட்டுமே. எனவே சந்தை நிலைப்படுத்தப்பட்டு பின்னர் மீள்வதற்கு முன்பு போல நேரம் எடுக்காது என்று தெரிவித்தார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!



Click it and Unblock the Notifications