சம்பன் உத்பதன் இந்தியா லிமிடெட் நிறுவனம் மரபுசாரா ஆதாரங்கள் மூலம் மின் உற்பத்தி மற்றும் கழிவு ரப்பர்களிலிருந்து புதிய ரப்பர் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் தனது கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை கடந்த 22ம் தேதியன்று வெளியிட்டது. சம்பன் உத்பதன் இந்தியா நிறுவனத்தின் நிதி நிலை முடிவுகள் எதிர்பார்ப்புகளை காட்டிலும் சிறப்பாக இருந்தது.
இதன் எதிரொலியாக கடந்த புதன்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கிய போது சம்பன் உத்பதன் இந்தியா நிறுவன பங்கின் விலை 10 சதவீத உயர்வுடன் வர்த்தகத்தை ஆரம்பித்தது. அன்றைய தினம் பங்குச் சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தின் முடிவு விலையை காட்டிலும் 10 சதவீதம் அதிகரித்து ரூ.36.68 என்ற விலையில் வர்த்தகத்தை தொடங்கியது.

இருப்பினும் அன்றைய வர்த்தக தினத்தின் முடிவில் சம்பன் உத்பதன் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 5 சதவீதம் அதிகரித்து ரூ.34.99ல் முடிவுற்றது. 2025 மார்ச் காலாண்டில் சம்பன் உத்பதன் இந்தியா நிறுவனத்தின் வருவாய் 44 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.27.5 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் வருவாயாக ரூ.19.1 கோடி ஈட்டியிருந்தது.
சம்பன் உத்பதன் இந்தியா நிறுவனம் 2025 மார்ச் காலாண்டில் நிகர லாபமாக ரூ.5.46 கோடி ஈட்டியுள்ளது. ஆனால் இதில், நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு சான்றிதழின் விற்பனையிலிருந்து பெறப்பட்ட ரூ.4.76 கோடியும் அடங்கும். கடந்த மாாச் காலாண்டில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கு வருமானம் ரூ.1.34ஆக உயர்ந்துள்ளது. இது 2024 மார்ச் காலாண்டில் ரூ.0.11ஆக இருந்தது.
2024 மே 6ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையில் சம்பன் உத்பதன் இந்தியா நிறுவன பங்கின் விலை புதிய 52 வார குறைந்தபட்ச விலையான ரூ.19.20க்கு சென்றது. இருப்பினும் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. அந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதியன்று இப்பங்கின் விலை புதிய 52 வார உச்சமான ரூ.47.94ஐ எட்டியது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே சம்பன் உத்பதன் இந்தியா நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.91 சதவீதம் குறைந்து ரூ.31.73ஆக சரிந்தது. இப்பங்கின் விலை தற்போது அதன் உச்சவிலையை காட்டிலும் சுமார் 34 சதவீதம் குறைவாகும். இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.130 கோடியாக உள்ளது.
ரூ.1 லட்சம் ரூ.4.72 கோடியாக மாறிய அதிசயம்.. டைனகான்ஸ் சிஸ்டம்ஸ் பங்கு உங்ககிட்ட இருக்கா..?
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.


Click it and Unblock the Notifications