சின்ன கம்பெனிதான் ஆனா தாராள மனசு.. 2வது முறையாக டிவிடெண்ட் அறிவித்த சரஸ்வதி சாரீ டிப்போ

சரஸ்வதி சாரீ டிப்போ நிறுவனம் புடவைகள் மற்றும் குர்திகள், ஆடை பொருட்கள், லெஹங்காக்கள் உள்ளிட்ட பிற பெண்களுக்கான ஆடைகள் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒரு B2B மொத்த விற்பனையாளர். 2024 ஆகஸ்ட் மாதத்தில்தான் இந்நிறுவன பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. மைக்ரோகேப் பங்கான இந்நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது. இது இந்நிறுவனம் ஐபிஓ வெளியிட்டது முதல் அறிவித்த இரண்டாவது இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பாகும்.

சரஸ்வதி சாரீ டிப்போ நிறுவனம் பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு 2025-26ம் நிதியாண்டுக்கு பங்குதாரர்களுக்கு ரூ.10 முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றுக்கு ரூ.1.51 (15.15 சதவீதம்) இடைக்கால டிவிடெண்ட் அறிவித்தது. இடைக்கால டிவிடெண்ட் பெற உரிமையுள்ள பங்குதாரர்களின் தகுதியை உறுதி செய்வதற்காக ஏப்ரல் 10ம் தேதி பதிவு தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. சரஸ்வதி சாரீ டிப்போ நிறுவனம் இடைக்கால டிவிடெண்ட் அறிவித்துள்ளது முதலீட்டாளர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

சின்ன கம்பெனிதான் ஆனா தாராள மனசு.. 2வது முறையாக டிவிடெண்ட் அறிவித்த சரஸ்வதி சாரீ டிப்போ

சரஸ்வதி சாரீ டிப்போ நிறுவனம் தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. 2024 செப்டம்பர் காலாண்டில் சரஸ்வதி சாரீ டிப்போ நிறுவனம் வருவாயாக ரூ.164.75 கோடியும், நிகர லாபமாக ரூ.9.57 கோடியும் ஈட்டியுள்ளது. மேலும் அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின ஒரு பங்கு வாயிலான வருமானம் ரூ.2.42ஆக இருந்தது. கடந்த டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின வருவாய் ரூ.182.14 கோடியாக உயர்ந்துள்ளது. அதேகாலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.7.88 கோடியாக குறைந்துள்ளது. அந்த காலாண்டில் இந்நிறுவனத்தின ஒரு பங்கு வாயிலான வருமானம் ரூ.1.99ஆக உள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது, சரஸ்வதி சாரீ டிப்போ நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.73 சதவீதம் குறைந்து ரூ.84.61ஆக இருந்தது. இந்நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.335 கோடியாக உள்ளது. தற்போது இப்பங்கின் விலை அதன் உச்ச விலையை காட்டிலும் 62 சதவீதம் குறைவாக உள்ளது. 2024 ஆகஸ்ட் 21ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை இதுவரை இல்லாத அதிகபட்ச அளவான ரூ.218.80ஐ எட்டியது. ஆனால் அதன் பிறகு இப்பங்கின் விலை தொடர்ந்து சரிவு கண்டது.

கடந்த மார்ச் 28ம் தேதியன்று பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.80.27ஆக சரிந்தது. சரஸ்வதி சாரீ டிப்போ நிறுவனம் என்னதான் தொடர்ந்து லாபம் ஈட்டி வந்தபோதிலும், அந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு ஆதாயத்தை கொடுக்கவில்லை. தற்போது இந்நிறுவன பங்கின் விலை அதன் ஐபிஓ விலையை காட்டிலும் குறைவாகவே உள்ளது.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+