பங்குச் சந்தையில் ஒரு பென்னி ஸ்டாக் அப்பர் சர்க்கியூட் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த பென்னி பங்கு சர்வேஷ்வர் புட்ஸ்.
இந்நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் பிராண்டட் மற்றும் பிராண்டட் இல்லாத பாசுமதி மற்றும் பாசுமதி அல்லாத அரிசியை உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்துதல் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்நிறுவனம் நிம்பார்க் ஆர்கானிக் ஸ்டோர்கள் மூலம் ஆர்கானிக் உணவுகளை விற்பனை செய்கிறது.

ஜம்மு அண்டு காஷ்மீரில் தனது பாசுமதி அரிசிக்காக புவிசார் குறியீடு பெற்ற முதல் நிறுவனம் சர்வேஷ்வர் புட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அந்நிறுவனத்துக்கு வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி ஆணையம் (ஏபிஇடிஏ) அண்மையில் வழங்கியது.
தற்போது இந்நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுப்படுத்தும் வகையில் பஞ்சாப் மற்றும் டெல்லி என்சிஆர் பகுதியில் நிம்பார்க் ஆர்கானிக் ஸ்டோர்களை திறக்க உள்ளது. இந்நிறுவனம் 15 பிரத்தியேக விற்பனை நிலையங்களை கொண்டுள்ளது.
இந்நிறுவனத்தின் வருவாய், லாபம் நிலவரமும் திருப்தி அளிக்கும் விதத்தில் உள்ளது. 2023 செப்டம்பர் காலாண்டில் சர்வேஷ்வர் புட்ஸ் நிறுவனத்தின் நிகர வருவாய் 15.2 சதவீதம் உயர்ந்து ரூ.205.22 கோடியாகவும், நிகர லாபம் 220 சதவீதம் உயர்ந்து ரூ.4.83 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் நிகர வருவாய் 14 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.689 கோடியாகவும், நிகர லாபம் 166.7 சதவீதம் ஏற்றம் கண்டு ரூ.8 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
பஞ்சாப் மற்றும் டெல்லி என்சிஆரில் வர்த்தகத்தை விரிவுப்படுத்த (நிம்பார்க் ஆர்கானிக் ஸ்டோர்) உள்ளதாக சர்வேஷ்வர் புட்ஸ் நிறுவனம் அறிவித்ததையடுத்து மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே அந்நிறுவன பங்கின் விலை அப்பர்சர்க்கியூட் அடித்து புதிய 52 வார உச்சமான ரூ.7.92ஐ தொட்டது.
இதனையடுத்து முதலீட்டாளர்கள் லாப நோக்கில் பங்குகளை விற்பனை செய்ததால் பங்கின் விலை சிறிது குறைந்து ரூ.7.24ல் முடிவுற்றது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இந்நிறுவன பங்கின் விலை 3.31 சதவீதம் குறைந்து ரூ.7.00ல் வர்த்தகமானது.
2023 மார்ச் 28ம் தேதியன்று மும்பை பங்குச் சந்தையில் சர்வேஷ்வர் பங்கு தனது 52 வார குறைவான ரூ.2.07க்கு சென்றது. அது முதல் இதுவரையிலான காலத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 282.60 சதவீதம் ஆதாயம் அளித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் இப்பங்கின் விலை 1,700 சதவீதம் அதிகரித்துள்ளது. முதலீட்டாளர்கள் எப்போதும் இந்த மைக்ரோ கேப் பங்கு மீது ஒரு கவனம் வைக்க வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications