தற்போது மும்பை பங்குச் சந்தை ஒப்பந்தங்கள் (பிஎஸ்இ) செவ்வாய்க்கிழமையும், தேசிய பங்குச் சந்தை ஒப்பந்தங்கள் (என்எஸ்இ) வியாழக்கிழமையும் காலாவதியாகின்றன. இந்த சூழ்நிலையில், பங்குச் சந்தை ஒழுங்கு முறை ஆணையமான இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), என்எஸ்இ-யின் காலாவதி தினத்தை செவ்வாய்க்கிழமையாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
விரைவில்
பங்குச் சந்தைகளுக்கான இன்டெக்ஸ் காலாவதி நாட்கள் குறித்த செபியின் சுற்றறிக்கை விரைவில் வரக்கூடும். என்எஸ்இ செவ்வாய்க்கிழமையை அதன் காலாவதி நாளாக கருத விண்ணப்பித்திருக்கலாம் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பங்குச் சந்தைகளுக்கான காலாவதி நாட்கள் குறிதத விதிகளை பற்றி விவாதிக்க செபியின் பங்குச் சந்தை ஆலோசனை குழு (எஸ்எம்ஏசி) சமீபத்தில் கூடியது.

கடந்த மார்ச் மாதத்தில் செபி வெளியிட்ட ஆலோசனை அறிக்கையில், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களை பங்குச் சந்தைகள் காலாவதி நாட்களாக பயன்படுத்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தது. இது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு செபி தலைவர் துஹின் காந்தா பாண்டே கூறுகையில், ஆலோசனை அறிக்கையில் கருத்துகள் பெறப்பட்ட பிறகு, வரும் மாதங்களில் காலாவதி தேதிகள் குறித்த வழிமுறைகளை ஒழுங்கு முறை ஆணையம் வெளியிடும் என்று தெரிவித்தார்.
பிஎஸ்இ
என்எஸ்இ செவ்வாய்க்கிழமையை அதன் காலாவதி நாளாக கொண்டால், அது பிஎஸ்இ-க்கு பாதகமாக மாறி விடும். ஏனென்றால் சென்செக்ஸ் ஆப்ஷன்களில் 20 சதவீதம் சரிவு ஏற்படக் கூடும். ஏனெனில் அதன் பெரும்பகுதி என்எஸ்இ-க்கு மாறக் கூடும். கூடுதலாக, என்எஸ்இ உண்மையில் அதன் வாராந்திர காலாவதி நாளுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டால், இன்டெக்ஸ் ஆப்ஷன்களில் அதன் சந்தை பங்கு கிட்டத்தட்ட 5 சதவீதம் உயரக்கூடும் என்று தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
என்எஸ்இயின் டெரிவேடிவ் ஒப்பந்தங்களுக்கான காலாவதி நாளாக செவ்வாய்க்கிழமைக்கு செபி ஒப்புதல் அளிக்கக்கூடும் என்று தகவல் வெளியானதை தொடர்ந்து, பிஎஸ்இ பங்கின் விலை விறுவிறுவென சரிவு கண்டது. தேசிய பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் பிஎஸ்இ பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.97 சதவீதம் குறைந்து ரூ.7,015ஆக இருந்தது.
போனஸ் பங்கு
இருப்பினும், இன்று பிஎஸ்இ பங்கின் விலை ஏற்றம் கண்டுள்ளது. தேசிய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே பிஎஸ்இ லிமிடெட் பங்கின் விலை சுமார் 5 சதவீதம் உயர்ந்து ரூ.2,488 வரை சென்றது. பிஎஸ்இ முன்பு 2:1 போனஸ் பங்கு வெளியீட்டை அறிவித்தது. இது இன்று நடைமுறைக்கு வந்தது. இதன் மூலம் என்எஸ்இ-ல் பிஎஸ்இ பங்கின் விலை ரூ.2.335ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே பிஎஸ்இ லிமிடெட் பங்கின் விலை சுமார் 5 சதவீதம் உயர்ந்து ரூ.2,488 வரை சென்றது.
இன்று பிஎஸ்இ பங்குகள் எக்ஸ் போனஸாக வர்த்தகம் செய்யத் தொடங்கிய பின்னர், அந்நிறுவன பங்கின் விலை 66.6 சதவீதம் குறைந்தது. இது நிறுவனத்தின் போனஸ் வெளியீட்டை செயல்படுத்துவதை குறிக்கிறது.
ஒரு நாளைக்கு 18 லட்சம் பேரல்கள்.. ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி திடீர் அதிகரிப்பு..
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications