1,000 புள்ளிகள் ஏற்றம்..? வான வேடிக்கை காட்டும் சென்செக்ஸ்..!

இதுவரை அரசு சொன்ன அறிவிப்புகள் அனைத்துக்கும் ஒரே அடியாக பலன் கொடுப்பது போல இன்று சென்செக்ஸ் தீ பிடித்து ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது. இன்று காலை சென்செக்ஸ் 36,214 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கியது.

சென்செக்ஸ் நேற்றைய குளோசிங் புள்ளியான 36,093 புள்ளிகளில் இருந்து 121 புள்ளிகள் கேப் அப்பில் ஓப்பன் ஆன போதே முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் மகிழ்ச்சி அடைந்தாலும் சந்தை செண்டிமெண்ட் தெரியாமல் ஒரு சின்ன தயக்கத்தில் இருந்தார்கள்.

1,000 புள்ளிகள் ஏற்றம்..? வான வேடிக்கை காட்டும் சென்செக்ஸ்..!

சந்தை வர்த்தகமாகத் தொடங்கியதில் இருந்தே சென்செக்ஸ் இன்றைய நாளுக்கான புதிய உச்சங்களைத் தொட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அதிகபட்சமாக சென்செக்ஸ் காலை 11.15 மணி அளவில் 1,2,17 புள்ளிகள் அதிகரித்து 37,311 என்கிற புள்ளிகள் வர்த்தகம் ஆகி வருகிறது.

சின்ன சின்ன கார்ப்ப்ரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கார்ப்பரேட் வரியை ஒரு கணிசமான அளவில் குறைத்து இருப்பதால், சந்தையில் வர்த்தகம் ஆகும் நிறுவனங்களின் விலை ராக்கெட் வேகத்தில் விண்ணைத் தொட்டுக் கொண்டு இருக்கிறது. இந்த ஒரு அறிவிப்பை சந்தை மிகப் பெரிய பாசிட்டிவ் செய்தியாக வைத்துக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் வர்த்தகமாகும் 30 பங்குகளில் 30 பங்கும் அதிரடியாக விலை ஏற்றம் கண்டு வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸில் 30 இண்டெக்ஸில் வர்த்தகமாகும் மாருதி சுசூகி அதிகபட்சமாக 9 % வரை விலை ஏற்றம் கண்டிருக்கிறது. குறைந்த பட்சமாக டிசிஎஸ் மட்டும் 0.1% ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகிறது.

சென்செக்ஸ் போகிற போக்கைப் பார்த்தால் இன்று ஒரே நாளில் தன்னுடைய இரண்டாவது வலுவான ரெசிஸ்டென்ஸான 37,410-ஐயும் இன்றே உடைத்துக் கொண்டு மேல் நோக்கி வர்த்தகம் ஆகுமோ என்கிற சந்தோஷம் ஒரு பக்கம் இருக்கிறது.

ஆனால் மறு பக்கம் இந்த ஏற்றம் இன்ரு மாலை வர்த்தக நேர முடிவு வரை நிலைக்குமா என்கிற அச்சமும் பலமாக இருக்கிறது. இப்படித் தான் மே 23 அன்று சந்தை சுமார் 40,000 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் 1,190 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் நிறைவு அடைந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+