41,020-ல் நிறைவு..! பிரம்மாண்டம் காட்டிய சென்செக்ஸ்..!

நவம்பர் மாத ஃப்யூச்சர் கான்ட்ராக்டுகள் நிறைவடைய இருப்பதால், இந்தியாவின் பல துறை சார் இண்டெக்ஸ்கள் நல்ல ஏற்றம் கண்டு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போல தனிப்பட்ட பங்கு மற்றும் நிறுவனங்களுக்கான செய்திகள், ஒட்டு மொத்த பொருளாதாரத்தை பாதிக்கும் ரீதியிலான செய்திகள் அதிகம் கண்டு கொள்ளாமல், முதலீட்டாளர்கள் வர்த்தகம் மேற்கொண்டது என பல காரணங்கள் இன்று சந்தையை உயர்த்தி இருக்கின்றன.

மிக முக்கியமாக, சந்தையில் முதலீட்டாளர்களும், வர்த்தகர்களும், இந்திய சந்தை இன்னும் பல உயரங்களை விரைவில் தொடும் என்கிற பாசிட்டிவ் செண்டிமெண்ட் உடன் இருப்பதை உணர முடிகிறது.

41,020-ல் நிறைவு..! பிரம்மாண்டம் காட்டிய சென்செக்ஸ்..!

சென்செக்ஸ் டே சார்ட்டில் கடந்த 08 நவம்பர் 2019, 20 நவம்பர் 2019, 25 நவம்பர் 2019 என மூன்று நாட்களும் ஒரு கப் அண்ட் சாசர் பேட்டனை உருவாக்கி இருக்கிறது. இந்த பேட்டனின் உச்ச புள்ளியாக 40,750 புள்ளிகள் தான் இருக்கிறது. ஆனால் நேற்றைய வர்த்தகம், 40,889 புள்ளிகளில் நிறைவடைந்து இருப்பதால், அந்த பேட்டனையும் சேர்த்து உடைத்து இருக்கிறது. எனவே சென்செக்ஸில் ஒரு ஏற்ற டிரெண்ட் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக நேற்றைய செய்தியில் சொல்லி இருந்தோம். சொன்னது போலவே, சென்செக்ஸ் ஏற்றம் கண்டு, இன்று 41,020 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது.

எனவே, சந்தை நாளையும் இந்த மொமெண்டத்தில், ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால், நேற்று சொன்னது போல 41,250 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். இன்று சென்செக்ஸ் புதிய உச்சத்தில் நிறைவடைந்து இருப்பது போல, நாளையும் புதிய ஏற்றத்தில் நிறைவடையுமா எனப் பார்ப்போம்.

சார்ட் பேட்டனைப் பார்த்தால் 41,000 புள்ளிகள் இப்போது வரை ஒரு நல்ல வலுவான சப்போர்ட்டாகத் தெரியவில்லை. எனவே நாளை ஏதாவது நெகட்டிவ் செய்தி வந்து, சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 40,900 முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின், அடுத்த வலுவான சப்போர்ட்டாக 40,750 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,821 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,979 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 41,020 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 199 புள்ளிகள் ஏற்றம் கண்டு இருக்கிறது.

இன்று காலை நிஃப்டி 12,068 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 12,100 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 63 புள்ளி ஏற்றம் கண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 06 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,729 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,227 ஏற்றத்திலும், 1,289 பங்குகள் இறக்கத்திலும், 213 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,729 பங்குகளில் 40 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 126 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

யெஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், எஸ்பிஐ, மாருதி சுசூகி, ஹிண்டால்கோ போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. பார்தி இன்ஃப்ராடெல், சிப்லா, லார்சன் அண்ட் டியூப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+