575 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..! தடுமாறும் நிஃப்டி..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பையே சிறையில் அடைக்க, அதிபரை விசாரிக்கும் அளவுக்கு அமெரிக்க அரசியலில் ஒரு நிலையற்ற தன்மை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் உலக சந்தைகள் அனைத்தும் இந்த செய்தியால் கொஞ்சம் பதட்டத்துடன் காணப்படுகிறது. அதோடு இந்தியாவில் பஞ்சாப் மற்றும் மாகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்திருக்கும் தில்லு முல்லுகள் எல்லாம் வெளிச்சத்துக்கு தெரிய வந்து மீண்டும் இந்திய வங்கித் துறைகள் மீது முதலீட்டாளர்களுக்கு சந்தேகம் எழுந்து இருக்கிறது. இந்த இரண்டு விஷயங்களும் தற்போது இந்தியய சந்தை சரிவுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது.

போதாக் குறைக்கு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் தொடர்ந்து நிலையில்லாமல் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இவைகள் எல்லாம் சேர்ந்து இந்திய சந்தைகளை தற்போது புரட்டி எடுத்துக் கொண்டு இருக்கிறது.

575 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்..! தடுமாறும் நிஃப்டி..!

நேற்று மாலை, சென்செக்ஸ் 39,097 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. ஆனால் இன்று காலையிலேயே 39,087 என ஒரு சிறிய கேப் டவுனில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது. சென்செக்ஸ் 30 இண்டெக்ஸ் இன்று காலை முதலே தொடர்ந்து இறக்கத்தில் தான் வர்த்தகமாகி வந்திருக்கிறது. மதியம் சுமார் 3.00 மணி அளவில் சென்செக்ஸ் தன் இன்றைய நாளுக்கான உச்ச கட்ட இறக்கமாக 38,510 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. அதாவது சென்செக்ஸ் நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து 587 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.

அதே போல நேற்று மாலை, நிஃப்டி 11,588 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது. ஆனால் இன்று காலையிலேயே 11,564 என ஒரு சிறிய கேப் டவுனில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது. நிஃப்டி 50 இண்டெக்ஸ் இன்று காலை முதலே தொடர்ந்து இறக்கத்தில் தான் வர்த்தகமாகி வந்திருக்கிறது. மதியம் சுமார் 3.00 மணி அளவில் சென்செக்ஸ் தன் இன்றைய நாளுக்கான உச்ச கட்ட இறக்கமாக 11,416 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. அதாவது நிஃப்டி நேற்றைய குளோசிங் புள்ளியில் இருந்து 172 புள்ளிகள் சரிந்து இருக்கிறது.

தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.09-க்கு வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 61.19 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+