ஓப்பனிங்கில் 41,120 உச்சம்..! குளோசிங்கில் 40,821..!

தடுமாறிய டெலிகாம் துறை, இந்திய பொருளாதார மந்த நிலை இன்னும் தொடரும் என்கிற டிசிபி வங்கியின் அறிக்கை, இறக்கத்தில் வர்த்தகமாகத் தொடங்கிய பிரான்ஸ் மற்றும் ஜெர்மானிய சந்தைகள், இறக்கத்திலேயே வர்த்தகமான ஆசிய சந்தைகள் என கொஞ்சம் நெகட்டிவிட்டி இன்று அதிகம் தான்.

சென்செக்ஸ் டே சார்ட்டில் கடந்த 08 நவம்பர் 2019, 20 நவம்பர் 2019, 25 நவம்பர் 2019 என மூன்று நாட்களும் ஒரு கப் அண்ட் சாசர் பேட்டனை உருவாக்கி இருக்கிறது. இந்த பேட்டனின் உச்ச புள்ளியாக 40,750 புள்ளிகள் தான் இருந்தது. ஆனால் நேற்றைய வர்த்தகம், 40,889 புள்ளிகளில் நிறைவடைந்து இருப்பதால், அந்த பேட்டனையும் சேர்த்து உடைத்து இருக்கிறது. எனவே சென்செக்ஸில் ஒரு ஏற்ற டிரெண்ட் வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகச் சொன்னோம். ஆனால் இன்று சந்தை 41,120-ஐத் தொட்ட போதும், நேற்றைய குளோசிங்கைத் தாண்டி இன்று நிறைவடைய வில்லை. இருப்பினும் 40,750 என்கிற சப்போர்ட்டையும் உடைக்கவில்லை.

ஓப்பனிங்கில் 41,120 உச்சம்..! குளோசிங்கில் 40,821..!

எனவே, சந்தை நாளையும் இந்த மொமெண்டத்தில், ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால், நேற்று சொன்னது போல 41,250 முதல் மற்றும் வலுவான ரெசிஸ்டென்ஸாக வைத்துக் கொள்ளலாம். இதுவரை சென்செக்ஸ் தொட்ட உச்ச புள்ளிகள் அனைத்தையும் கடந்து இன்று சென்செக்ஸ் மீண்டும் புதிய உச்ச புள்ளியைத் தொட்டு இருப்பதும் கவனிக்கத் தக்கது.

நாளை ஏதாவது நெகட்டிவ் செய்தி வந்து, சந்தை இறக்கம் காணத் தொடங்கினால் 40,650 முதல் சப்போர்ட்டாக வைத்துக் கொள்ளலாம். அதற்குப் பின், அடுத்த வலுவான சப்போர்ட்டாக 40,500 புள்ளிகளை எடுத்துக் கொள்ளலாம்.

நேற்று மாலை சென்செக்ஸ் 40,889 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 41,022 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,821 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 67 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.

இன்று காலை நிஃப்டி 12,110 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 12,037 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 36 புள்ளி இறக்கம் கண்டு இருக்கிறது.

சென்செக்ஸின் 30 பங்குகளில் 09 பங்குகள் ஏற்றத்திலும், 21 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,707 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,118 ஏற்றத்திலும், 1,410 பங்குகள் இறக்கத்திலும், 179 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,707 பங்குகளில் 46 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 121 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

ஐசிஐசிஐ பேங்க், கெயில், ரெட்டீஸ் லெபாரட்டரீஸ், இண்டஸ் இண்ட் பேங்க், டாடா ஸ்டீல் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஜி பார்தி ஏர்டெல், பார்தி இன்ஃப்ராடெல், க்ராசிம், ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+