800 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்..! அதிரடி காட்டும் நிஃப்டி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்று காலை சென்செக்ஸ் 37,363 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. காலை வர்த்தகம் தொடங்கும் போதே கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் புள்ளியான 36,701 புள்ளிகளில் இருந்து சுமார் 660 புள்ளிகள் கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது ஒட்டு மொத்தமாக சுமார் 800 புள்ளிகள் ஏற்றம் கண்டு 37,501 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 11,000 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை குளோசிங் புள்ளியை விட 171 புள்ளிகள் கேப் அப்பில் தான் வர்த்தகமாகத் தொடங்கியது. தற்போது 230 புள்ளிகள் ஏற்றம் கண்டு 11,059 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

800 புள்ளிகள் ஏற்றத்தில் சென்செக்ஸ்..! அதிரடி காட்டும் நிஃப்டி..!

 

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 24 பங்குகள் ஏற்றத்திலும், 06 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 38 பங்குகள் ஏற்றத்திலும், 12 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,505 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,602 பங்குகள் ஏற்றத்திலும், 771 பங்குகள் இறக்கத்திலும், 131 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,505 பங்குகளில் 12 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 217 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில் பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. மெட்டல் துறை மட்டும் இறக்கத்தில் வர்த்தகமாயின. ரியாலிட்டி, பொதுத் துறை வங்கிகள், வங்கிகள், மீடியா, வங்கி போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் அதிக ஏற்றத்தில் வர்த்தகமாயின. எஸ்பிஐ, யெஸ் பேங்க், ஹெச் டி எஃப் சி பேங்க், ஹெச் டி எஃப் சி, ஐசிஐசிஐ பேங்க் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாகி வருகின்றன.

இந்தியா புல்ஸ் ஹவுசிங், யெஸ் பேங்க், அதானி போர்ட்ஸ், ஹெச் டி எஃப் சி , ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகி வருகின்றன. ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், வேதாந்தா, சன் பார்மா, டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப் போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 71.91-க்கு வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 59.12 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

sensex 800 points up crossed two strong resistance in one day

sensex 800 points up crossed two strong resistance in one day
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?