வரலாற்றில் முதல் முறையாக இன்று சென்செக்ஸ் 46,000 தொட்டுள்ளது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 494.99 புள்ளிகள் அதிகரித்து, 46,103 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 136.10 புள்ளிகள் அதிகரித்து, 13,529 ஆகவும் முடிவடைந்துள்ளது.
குறிப்பாக 1,604 பங்குகள் ஏற்றத்திலும், 1103 பங்குகள் சரிவிலும், 113 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

குறிப்பாக பேங்க் நிஃப்டி 1.5% ஏற்றத்திலும், இதே நிஃப்டி மெட்டல், பொதுத்துறை நிறுவனங்களின் குறியீடு சற்று சரிவிலும் முடிவடைந்தன. இதே சென்செக்ஸ் குறியீட்டில் அனைத்து குறியீடுகளும் சற்று பச்சை நிறத்திலும் முடிவடைந்தன.
நிஃப்டி குறியீட்டில் உள்ள யுபிஎல், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐஓசி, கோடக் மகேந்திரா, ஹெச்டிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஹிண்டால்கோ, ஸ்ரீ சிமெண்ட்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், விப்ரோ, மாருதி சுசூகி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஏசியன் பெயிண்ட்ஸ், கோடக் மகேந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும் அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், டாடா ஸ்டீல், மாருதி சுசூகி, எஸ்பிஐ, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
இன்று சர்வதேச சந்தைகளும் நல்ல ஏற்றத்தில் காணப்பட்ட நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையும் சற்று ஏற்றத்தில் காணப்பட்டது. குறிப்பாக கொரோனா தடுப்பு மருந்து பற்றிய சாதகமான செய்திகள் வந்து கொண்டுள்ள நிலையில், இதன் மூலம் சரிந்துபோன பொருளாதாரத்தினை விரைவில் மீட்டெடுக்க முடியும். அதோடு ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகளும் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையில், அதுவும் சந்தைக்கு சாதகமாகவே வந்து கொண்டுள்ளது. இதுவும் பங்கு சந்தைகளில் முதலீடுகள் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளன. இதனால் பங்கு சந்தைகள் தொடர்ந்து புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன.
.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications