வாரத்தில் முதல் நாளே ஜாக்பாட் தான்.. 48,000 தாண்டிய சென்செக்ஸ்.. என்ன காரணம்..!

கடந்த ஆண்டில் இந்திய பங்கு சந்தைகள் புதிய உச்சத்திற்கு மேல் உச்சமாக கொடுத்து முதலீட்டாளர்களை குதூகலப்படுத்தின. தற்போது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தும், முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் அடிக்கும் விதமாக மீண்டும் புதிய உச்சத்தினை தொட்டுள்ளன.

கடந்த சில வர்த்தக தினங்களாக புதிய உச்சத்தினை தொட்டு வரும் இந்திய பங்கு சந்தைகள் இன்றும் புதிய உச்சத்தில் தான் வர்த்தகமாகி வருகின்றன.

இன்று சந்தை ப்ரீ ஒபனிங்லேயே சற்று ஏற்றத்தில் தான் காணப்பட்டது. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 97.17 புள்ளிகள் அதிகரித்து, 47,966.15 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 77.30 புள்ளிகள் அதிகரித்து 14,091.80.40 ஆகவும் இருந்தது.

தொடக்கத்திலேயே சரிவு தான்

தொடக்கத்திலேயே சரிவு தான்

இதனையடுத்து தொடக்கத்திலும் சந்தை வலுவான ஏற்றத்திலேயே தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் 236.65 புள்ளிகள் அதிகரித்து, 48,105.63 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 74.40 புள்ளிகள் அதிகரித்து, 14,092.90 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1374 பங்குகள் ஏற்றத்திலும், 223 பங்குகள் சரிவிலும், 50 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

ஏற்றத்துக்கு என்ன காரணம்

ஏற்றத்துக்கு என்ன காரணம்

சந்தைக்கு சாதகமாக தொடர்ந்து அன்னிய முதலீடுகள் வரத்து, கொரோனா தடுப்பூசி குறித்த சாதகமான அறிக்கைகள், சர்வதேச சந்தையின் எதிரொலி உள்ளிட்ட பல காரணங்களினால் இந்திய சந்தைகள் கடந்த சில தினங்களாக ஏற்றத்தில் இருந்து வருகின்றது. குறிப்பாக ஜப்பானின் சந்தை 30 வருடத்தில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை தொட்டுள்ளது. இதே ஆசிய சந்தைகளும் தொடர்ந்து ஏற்றத்தினை கண்டு வருகின்றன.

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

நிஃப்டி குறியீட்டில் உள்ள பங்குகள்

இதற்கிடையில் பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள் குறியீடு தவிர, நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் அனைத்தும் பச்சை நிறத்திலேயே உள்ளன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, டாடா மோட்டார்ஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், கெயில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஹீரோ மோட்டோகார்ப், டைட்டன் நிறுவனம், ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பங்குகள்

இதே சென்செக்ஸ் குறியீட்டில் ஓஎன்ஜிசி, லார்சன், டிசிஎஸ், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ், பஜாஜ் ஆட்டோ, டைட்டன் நிறுவனம், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய நிலவரம்

தற்போதைய நிலவரம்

இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 256.88 புள்ளிகள் அதிகரித்து, 48,125.86 ஆகவும், இதே நிஃப்டி 85.65 புள்ளிகள் அதிகரித்து, 14,104.15 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது, கடந்த அமர்வில் 73.29 ரூபாயாக முடிவடைந்த நிலையில், ஓபன் இன்ட்ரஸ்ட் பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்படுகிறது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+