மும்பை: இதற்கு முந்தைய கணிப்புகளில் 37,410 உடைபடும் பட்சத்தில் அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக 37,000 புள்ளிகள் செயல்படும் எனவும் சொல்லி இருந்தோம். நாம் கணித்த படியே சென்செக்ஸ் தன் 37,410 சப்போர்ட்டை, நேற்று ஆகஸ்ட் 01, 2019 அன்று உடைத்துக் கொண்டு சென்று 37,000 புள்ளிகளில் சப்போர்ட் எடுத்து 37,018 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது.
சென்செக்ஸ் தன் 37,500 என்கிற வலுவான ரெசிஸ்டென்ஸுக்குக் கீழ் நிறைவடைவது, மே 17, 2019-க்குப் பின் இது நான்காவது முறை. இத்தனை இறக்கங்களுக்குப் பின்னும், சென்செக்ஸ் டே சார்ட்டில் மார்ச் 11, 2019 முதல் பாட்டமாகவும், மே 14, 2019 இரண்டாவது பாட்டமாகவும், இன்று (ஆகஸ்ட் 01, 2019) மூன்றாவது பாட்டமாகவும் அமைந்திருப்பதை பார்க்க முடிகிறது. எனவே வலுவான சப்போர்ட் என்றால் 37,000 தான் ட்ரிபிள் பாட்டமாக நிற்கிறது. ஆக டபுள் டாப்களில் 18 ஏப்ரல் 2019 அன்று சென்செக்ஸ் தொட்ட 39,420 முதல் டாப் புள்ளியாகவும், ஜூன் 03, 2019 40,267 புள்ளிகள் இரண்டாவது மற்றும் பெரிய டாப்பாகவும் அமைந்திருக்கிறது எனச் சொல்லி இருந்தோம்.

எனவே சென்செக்ஸ் தன் 37,000 என்கிற வலுவான சப்போர்ட் புள்ளிகளை உடைத்தால் சுமார் 1,210 புள்ளிகள் வரை சரிந்து 35,790 வரை தொடலாம். எனவே 37,000 என்கிற சப்போர்ட் உடைபட்டால் 36,590 தான் முதல் மற்றும் வலுவான சப்போர்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அதை சென்செக்ஸ் வாராந்திர சார்ட்டும் உறுதி செய்கிறது. அப்படி அதுவும் உடைபட்டால் 36,000 புள்ளிகள் தான் அடுத்த மிக மிக வலுவான சப்போர்ட்டாக கண்ணில் படுகிறது எனவும் குறிப்பிட்டு இருந்தோம். இந்த சபோர்ட் புள்ளிகள் அப்படியே வைத்துக் கொள்வோம்.
நல்ல வேலையாக சென்செக்ஸ் இறக்கம் காணாமல் தன் 37,000 புள்ளிகளுக்கு இழுத்துப் பிடித்திருக்கிறது. ஆக 37,000 புள்ளிகள் என்பது தற்போது சென்செக்ஸின்ன் வலுவான சப்போர்ட் என்பது மீண்டும் உறுதியாகி இருக்கிறது. ஒருவேளை சந்தை அடுத்த வர்த்தக நாளிலும் ஏற்றம் காணத் தொடங்கினால் முதல் மற்ரும் வலுவான ரெசிஸ்டென்ஸாக 37,410 புள்ளிகளும், அதையும் உடைத்துக் கொண்டு மேலே ஏற்றம் கண்டால் 38,000 புள்ளிகள் அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாகவும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
இன்று காலை சென்செக்ஸ் 36,920 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி ஏற்றம் கண்டு 37,118 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட 100 புள்ளிகள் அதிகம். அதே போல் நிஃப்டி 50 இண்டெக்ஸ் காலை 10,930 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 10,997 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 17 புள்ளிகள் ஏற்றம் கண்டிருக்கிறது.
இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 17 பங்குகள் ஏற்றத்திலும், 13 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 25 பங்குகள் ஏற்றத்திலும், 25 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,597 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,100 பங்குகள் ஏற்றத்திலும், 1,359 பங்குகள் இறக்கத்திலும், 138 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,597 பங்குகளில் 18 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 609 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
இன்று நிஃப்டி இண்டெக்ஸ்களில், ஆட்டோமொபைல் இண்டெக்ஸ் ஆச்சர்யமாக 1.13 சதவிகித ஏற்றத்தில் வர்த்தகமாகி, மொத்த சந்தையின் ஏற்றத்துக்கும் காரணமானது. பெரும்பாலான துறை சார் இண்டெக்ஸ்கள் பெரிய ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் ஃப்ளாட்டாக வர்த்தகமாயின. மற்ற அனைத்து துறை சார் இண்டெக்ஸ்களும் இறக்கத்தில் வர்த்தகமாயின. மீடியா, மெட்டல், பொதுத் துறை நிறுவனங்கள் போன்ற துறை சார் இண்டெக்ஸ்கள் கொஞ்சம் அதிக இறக்கத்தில் வர்த்தகமாயின. எஸ்பிஐ, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின.
பார்தி ஏர்டெல், பஜாஜ் ஆட்டோஸ், ஏஷியன் பெயிண்ட்ஸ், மாருதி சுஸிகி, ஈஷர் மோட்டார்ஸ் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. இந்தியாபுல்ச் ஹவுசிங், என் டி பி சி, எஸ்பிஐ, டாடா ஸ்டீல், கோல் இந்தியா போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 69.59 டாலராக வர்த்தகமாகி வருகிறது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 62.03 டாலருக்கு வர்த்தகமாகி வருகிறது.


Click it and Unblock the Notifications