செம குஷியில் முதலீட்டாளர்கள்.. சென்செக்ஸ் தொடர்ந்து புதிய உச்சம்.. இன்றும் 52,300 மேல் வர்த்தகம்..!

வாரத்தின் முதல் நாளான நேற்றே இந்திய பங்குச்சந்தைகள் வரலாற்று உச்சத்தில் காணப்பட்ட நிலையில், அதனை தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக 52 ஆயிரத்து 300 புள்ளிகளுக்கு மேல் வர்த்தகமாகிக் கொண்டுள்ளது.

இது தொடர்ச்சியாக வரலாற்று உச்சத்திலேயே கடந்த சில நாட்களாகவே வர்த்தகமாகிக் கொண்டுள்ள நிலையில், இது முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து சர்வதேச சந்தை ஏற்றம், அந்நிய முதலீடுகள் வரத்து சாதகமாக உள்ள காரணத்தினாலும், இந்திய சந்தையில் பணவீக்கம் உள்ளிட்ட பல பொருளாதாரம் சார்ந்த குறியீடுகள் சாதகமாக வந்து கொண்டுள்ள நிலையிலும், இந்திய சந்தைகள் தொடர்ந்து வரலாற்று உச்சத்தில் காணப்படுகின்றன.

ப்ரீ ஓபனிங் சந்தை

ப்ரீ ஓபனிங் சந்தை

குறிப்பாக இன்று ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சந்தைகள் ஏற்றத்தில் தான் காணப்பட்டன. மும்பை பங்கு சந்தையின் குறியீட்டென் சென்செக்ஸ் தொடக்கத்தில் 173.73 புள்ளிகள் அதிகரித்து, 52,327.86 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 84.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 15,399.50 ஆகவும் காணப்பட்டது.

இந்திய சந்தைகள் தொடக்கம்

இந்திய சந்தைகள் தொடக்கம்

இதனையடுத்து தொடக்கத்திலும் ஏற்றத்தில் தான் தொடங்கின. குறிப்பாக சென்செக்ஸ் தொடக்கத்தில் 306.77 புள்ளிகள் அதிகரித்து, 52,460.90 புள்ளிகளாகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 85.80 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 15,400.50 ஆகவும் தொடங்கியது. இதற்கிடையில் 991 பங்குகள் ஏற்றத்திலும், 353 பங்குகள் சரிவிலும், 60 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.

ரூபாய் Vs டாலர்

ரூபாய் Vs டாலர்

இதற்கிடையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்து, 72.65 ரூபாயாக தொடங்கியுள்ளது. இது முந்தைய அமர்வில் 72.69 ரூபாயாக முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. இது சர்வதேச சந்தைகள் ஏற்றத்தினை கண்டு வரும் நிலையில், இந்திய சந்தையில் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இது சந்தைக்கு சாதகமாகவும் அமைந்துள்ளது. இதன் காரணமாக ரூபாயின் மதிப்பும் ஏற்றத்தினை காணத் தொடங்கியுள்ளது.

அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்தில்

அனைத்து குறியீடுகளும் பச்சை நிறத்தில்

முதலீட்டாளர்களின் இந்த நம்பிக்கையினால் பேங்க் நிஃப்டி தவிர, அனைத்து இன்டெக்ஸ்களும் பச்சை நிறத்திலேயே காணப்படுகிறது. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், ஓஎன்ஜிசி , ஹிண்டால்கோ, ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், கோடக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, நெஸ்டில், பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஓஎன்ஜிசி, கோடக் மகேந்திரா, பவர் கிரிட் கார்ப், லார்சன், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, நெஸ்டில், பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

தற்போதைய சந்தை நிலவரம்?

தற்போதைய சந்தை நிலவரம்?

இதற்கிடையில் இன்றும் சென்செக்ஸ் 52,000 புள்ளிகளைக் கடந்து வர்த்தகமாகி வருகின்றது. தற்போது 199.51 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 52,353.64 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 77.85 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 15,392.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது. சந்தை தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது முதலீட்டாளர்களுக்கு கிடைத்த ஜாக்பாட் என்றே கூறலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+