வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் 52 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழே வர்த்தகமாகி கொண்டுள்ளது. தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே வரலாற்று உச்சத்தில் காணப்பட்ட நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் சரிவில் காணப்படுகிறது.
இது தொடர்ந்து சர்வதேச சந்தை ஏற்றம், அந்நிய முதலீடுகள் வரத்து உள்ளிட்ட பல்வேறு சர்வதேச காரணங்கள் சந்தைக்கு சாதகமான உள்ள நிலையில், புராபிட் புக்கிங் காரணத்தினால் சந்தை சரிவினைக் கண்டு வருகிறது.

இன்று காலை தொடக்கத்திலேயே அதாவது ப்ரீ ஓபனிங் சந்தையிலேயே சென்செக்ஸ் 116.90 புள்ளிகள் சரிந்து 51 ஆயிரத்து 987 புள்ளிகள் ஆகவும், இதே நிஃப்டி 11.40 புள்ளிகள் சரிந்து 15,302.10 பள்ளிகளாகவும் காணப்பட்டது.
இதனையடுத்து சந்தையின் தொடக்கத்தில் சென்செக்ஸ் 157.41 புள்ளிகள் சரிந்து 51 ஆயிரத்து 946 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 43.40 புள்ளிகள் சரிந்து 15,270 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி கொண்டுள்ளது. இதற்கிடையில் 641 பங்குகள் ஏற்றத்திலும், 563 பங்குகள் சரிவிலும், 68 பங்குகள் மாற்றம் இல்லாமலும் காணப்பட்டது. இது சந்தையில் முதலீட்டாளர்கள் கிடைத்த லாபத்தை புக்கிங் செய்து வருவதால், இரண்டாவது நாளாக இன்று சரிவை கண்டு வருகிறது.
இதற்கு இடையில் நிஃப்டி சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சிவப்பு நிறத்திலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி போர்ட்ஸ், ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்டிஎப்சி லைஃப், எஸ்பிஐ, ஹிண்டால்கோ உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே நெஸ்டில், பிபிசிஎல், இந்தஸிந்த் வங்கி, கோடக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள எஸ்பிஐ, எண்டிபிசி, பஜாஜ் ஆட்டோ, அல்ட்ராடெக் சிமெண்ட், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், இதே நெஸ்டில், இந்தஸிந்த் வங்கி, கோடக் மகேந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
இதற்கிடையில் தற்போது சென்செக்ஸ் 287.46 புள்ளிகள் குறைந்து, 51,816.71 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 76.90 புள்ளிகள் குறைந்து, 15,236.55 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications