இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஐரோப்பிய சந்தைகள் நேற்று பலமான சரிவினைக் கண்டன. இதன் காரணமாக இந்திய சந்தையும் நேற்று பலமான சரிவினை கண்டது.
ஆனால் இன்று ப்ரீ ஒபனிங் சந்தையிலேயே சரிவிலேயே தொடங்கியிருந்தாலும், தொடக்கத்தில் சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது.
குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 166 புள்ளிகள் அதிகரித்து 45,719 ஆகவும், இதே தேசிய பங்கு சந்தை நிஃப்டி 51 புள்ளிகள் அதிகரித்து, 13,379 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது. இதே 855 பங்குகள் ஏற்றத்திலும், 638 பங்குகள் சரிவிலும், இதே 65 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்படுகிறது.
ரூபாய் எதிர்பார்ப்பு
இதற்கிடையில் திங்கட்கிழமையன்று அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 1% மேலாக அதிகரித்து காணப்படுகிறது. இன்று இது 73.90 - 74.30 ரூபாய்க்குள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு இன்று நிஃப்டி, சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள ஐடி மற்றும், டெக் குறியீடுகள் தவிர, மீதமுள்ள அனைத்து குறியீடுகளும் சற்று சரிவிலேயே காணப்படுகிறது.
நிஃப்டி பங்குகள்
நிஃப்டி குறியீட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப், ஹெச்சிஎல் டெக், டெக் மகேந்திரா, ஈச்சர் மோட்டார்ஸ், கெயில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், ஓஎன்ஜிசி, ஐஓசி உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
சென்செக்ஸ் குறியீடு
இதே சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டெக் மகேந்திரா, ஹெச்சிஎல் டெக், பவர் கிரிட் கார்ப், பார்தி ஏர்டெல், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினராகவும், ஓஎன்ஜிசி, பஜாஜ் பைனான்ஸ், ஐடிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் காணப்படுகின்றது.
என்ன காரணம்
சர்வதேச அளவில் நிலவி வரும் நிச்சயமற்ற நிலையின் காரணமாக சர்வதேச பங்கு சந்தைகள் பலவும் சரிவிலேயே காணப்படுகின்றன. இதன் காரணமாக ஆசிய பங்கு சந்தைகள் ஏற்ற இறக்கத்திலேயே காணப்படுகிறது. சந்தைக்கு ஆதரவாக அன்னிய முதலீடுகளின் வரத்து இருந்தாலும், அதிகரித்து வரும் புதிய கொரோனா தாக்கம், மீண்டும் ஒரு லாக்டவுனுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதன் காரணமாக சந்தைகள் சரிவினைக் கண்டு வருகின்றன.
மீண்டும் சரிவு
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், இது புதிய கொரோனா தாக்கமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. இதனால் மீண்டும் கடுமையான லாக்டவுன் அமல்படுத்தப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் காலையில் ஏற்றத்துடன் தொடங்கிய சந்தை தற்போது சரிவில் உள்ளது.
தற்போது சென்செக்ஸ் 169 புள்ளிகள் குறைந்து, 45,384 புள்ளிகளாகவும், இதே நிஃப்டி 53 புள்ளிகள் சரிந்து, 13,275 புள்ளிகளாகவும் வீழ்ச்சி கண்டு காணப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications