காளையின் பிடியில் சிக்கிய இந்தியா.. உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தேர்தல் முடிவுகள் என்ன ஆகுமோ? என்ற எதிர்பார்புக்கெல்லாம் தற்போது ஒரு விடை கிடைத்துள்ள சந்தோஷத்தில் இந்திய பங்கு சந்தையில் முதலீட்டாளர் வெளுத்து வாங்கிக் கொண்டு உள்ளனர்.

 

ஆமாங்க இரண்டாவது முறையாக மோடியே ஆட்சியை பிடிப்பார் என்ற ஓரளவு யூகத்திலேயே இருந்து வந்த நிலையில், தற்போது அதை நிருபிக்கும் விதமாக தேர்தல் முடிவுகளும் சாகமாகவே வந்து கொண்டுள்ளன.

உச்சம் தொட்ட சென்செக்ஸ்.. 40,000 புள்ளியை எட்டியது

இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை, தொடர்ந்து ஆளும் கட்சிக்கே சாதகமாக போய் கொண்டிருப்பதால், இந்திய பங்கு சந்தையிலும் காளைக்கே முன்னுரிமையாக உள்ளது. ஆமாங்க சென்செக்ஸ் 40,000 தொட்டு பார்த்துவிட்டது.

இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் தற்போது 682 புள்ளிகள் உயர்ந்து 39781 ஆக வர்த்தகமாகி வருகிறது, இதுவே நிஃப்டி 194 புள்ளிகள் அதிகரித்து 11,932 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது.

இந்த நிலையில் பங்கு வர்த்தகத்தில் ஆளும் கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பங்கு சந்தையில் முதலீட்டு சாதமான சூழ்நிலையே உருவாகும், அதோடு அன்னிய முதலீடும் அதிகரிக்கும் என்ற கருத்து நிலவி வருகிறது. இதனால் இந்திய பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் தொடர்ந்து நம்பிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மும்பை சந்தையில் பல்வேறு துறைகளுக்கான குறியீட்டு எண்களும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகின்றன.

குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்‌ரீஸ், ஹெச்.டி.எஃப்.சி, லார்சன் & டூப்ரோ ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, இந்தஸ் இந்த் பேங்க், உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் விலை அதிகரித்தே காணப்படுகிறது.

அதோடு மாருதி சுசூகி, பாங்க் ஆப் பரோடா, டாடா மோட்டார்ஸ், யெஸ் பேங்க், இந்திய புல்ஸ் உள்ளிட்ட பங்குகளும் சற்று ஏற்றத்துடன் காணப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இன்று காலை சரிவில் இருந்த யெஸ் பேங்க் தற்போது ஏற்றம் கண்டு வருகிறது.

 

அதோடு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 69.53 ஆக அதிகரித்தும் வர்த்தகமாகியும் வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex and Nifty Open at Highs, Modi Takes Early Lead

Indian share markets opened the day on a strong note as the counting of votes begin. Now its surged to record highs after the counting trends showed PM marendra modi on over 300 seats. So Sensex is touch 40,000 around, nifty is trading up by 190 points.
Story first published: Thursday, May 23, 2019, 11:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X