பலத்த சரிவுக்கு பின் சற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. !

சென்செக்ஸ் நேற்றைய உச்சத்திலிருந்து 1,300 புள்ளிகளுக்கு மேல் சரிவினைக் கண்ட நிலையில், வாரத்தின் இறுதி நாளான இன்று சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக சற்று ஏற்றத்தில் உள்ளது.

தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 181 புள்ளிகள் அதிகரித்து, 39,909 ஆக அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றது. இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 54 புள்ளிகள் அதிகரித்து, 11,734 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது.

பலத்த சரிவுக்கு பின் சற்றே ஏற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. !

அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு சற்று அதிகரித்து, 73.32 ரூபாயாகவும் காணப்படுகிறது. இது நேற்றைய முடிவில் 73.38 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலை தொடக்கத்தில் 73.43 ரூபாயாக தொடங்கியது. எனினும் தற்போது சற்று அதிகரித்து காணப்படுகிறது.

அன்னிய முதலீட்டாளர்கள் இந்த வாரம் தொடக்கம் முதல் கொண்டே முதலீடுகளை அதிகரித்து வந்த நிலையில், நேற்று புராபிட் செய்ததன் காரணமாக சந்தை பலத்த சரிவினைக் கண்டது. ஆனால் இன்று ப்ரீ ஒபனிங் செசனிலேயே சற்று பாசிடிவ் ஆகத் தான் காணப்பட்டது. இந்த நிலையில் தொடக்கத்திலேயே சென்செக்ஸ் ஏற்றத்தில் தான் தொடங்கியது.

அதோடு இதனை ஊக்கப்படுத்தும் விதமாக ஆசிய சந்தைகளும் சற்று ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இரண்டாம் கட்ட கொரோனா பரவல் காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன,.

இன்றைய சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு தவிர, மற்ற அனைத்து குறியீடுகளும் சற்றே ஏற்றத்தில் தான் காணப்படுகின்றன.

குறிப்பாக டிவிஸ் லேப், டாடா ஸ்டீல், ஹீரோ மோட்டோகார்ப், சிப்லாம் பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்துடன் காணப்படுகிறது. இதே யுபிஎல், ஹெச்சிஎல் டெக், பஜாஜ் பைனான்ஸ், நெஸ்டில், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் நிஃப்டி குறியீட்டில் சரிவில் காணப்படுகிறது.

இதே பிஎஸ்இ குறியீட்டில் டாடா ஸ்டீல், டைட்டன் நிறுவனம், கோடக் மகேந்திரா, பவரி கிரிட் கார்ப், இந்தஸிந்த் வங்கி, உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்துடனும், ஹெச் சி எல் டெக், பஜாஜ் பைனான்ஸ், நெஸ்டில், ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட பங்குகள் சற்று சரிவிலும் காணப்படுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+