தடுமாற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. ரூபாயின் மதிப்பு எவ்வளவு..!

கடந்த எட்டு சந்தை தினங்களாகவே ஏற்றம் கண்டு வந்த சென்செக்ஸ், நிஃப்டி, இன்று காலை தொடக்கத்தில் சற்று சரிவில் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 29.91 புள்ளிகள் குறைந்து, 40,563 ஆக அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றது. இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 3 புள்ளிகள் அதிகரித்து, 11,934 ஆக வர்த்தகமாகி வருகின்றது.

தடுமாற்றத்தில் சென்செக்ஸ், நிஃப்டி.. ரூபாயின் மதிப்பு எவ்வளவு..!

இதே 390 பங்குகள் மிக அட்வான்ஸிடாகவும், 447 பங்குகள் சரிவிலும், 52 பங்குகள் எந்த மாற்றமும் இல்லாமலும் காணப்படுகிறது.

இதே அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.27 ரூபாயாக சரிந்து காணப்படுகிறது. எனினும் கடந்த வர்த்தக அமர்வில் ரூபாயின் மதிப்பானது 73.41 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்த்தக்கது. அதே நேரம் அமெரிக்க டாலரின் மதிப்பானது 93.5 ஆக சரிந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான தொழில் உற்பத்தி குறித்தான குறியீடு 8% வீழ்ச்சி கண்டு உள்ளது. லாக்டவுனில் தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், முக்கிய எட்டு துறைகளும் வீழ்ச்சியில் தான் உள்ளன.

இதே செப்டம்பர் மாதத்திற்கான நுகர்வோர் விலை பணவீக்கம் 7.34% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.69% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சந்தையில் நிஃப்டி ஆட்டோ இன்டெக்ஸ், நிஃப்டி ஐடி குறியீடு, நிஃப்டி 50 குறியீடு அனைத்தும் சற்று ஏற்றத்தில் உள்ளன. எனினும் நிஃப்டி வங்கி குறியீடு சற்று சரிவிலும் காணப்படுகின்றது.

குறிப்பாக அல்ட்ரா டெக் சிமெண்ட். ஸ்ரீ சிமெண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், ஏசியன் பெயிண்ட்ஸ், பார்தி ஏர்டெல் உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்துடன் காணப்படுகிறது. ஐசிஐசிஐ வங்கி, கெயில், இந்தஸிந்த் வங்கி, டாடா மோட்டார்ஸ், எஸ்பிஐ உள்ளிட்ட பங்குகள் நிஃப்டி குறியீட்டில் சரிவில் காணப்படுகிறது.

இதே பிஎஸ்இ குறியீட்டில் அல்ட்ரா டெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ், டைட்டன் நிறுவனம், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் நல்ல ஏற்றத்துடனும், ஐசிஐசிஐ வங்கி, இந்தஸிந்த் வங்கி, எஸ்பிஐ, ஆக்ஸிஸ் வங்கி, ஹெச் டி எஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் சற்று சரிவிலும் காணப்படுகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+