வாரத்தின் முதல் நாளே தூள் கிளப்பும் சென்செக்ஸ், நிஃப்டி.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

மும்பை: வாரத்தின் முதல் நாளான இன்றே நல்ல அறிகுறியாக, சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது.

இது இன்றல்ல, மூன்றாவது சந்தை தினமாக நல்ல ஏற்றத்திலேயே தொடங்கியுள்ளது. இது சாதகமான சர்வதேச நிகழ்வுகள் காரணமாக ஏற்றம் கண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

தொடக்கத்தில் எஸ் &பி சென்செக்ஸ் 0.7% ஏற்றத்தில் தொடங்கி, 38,956 ஆக வர்த்தகமாகியுள்ளது. இதே நிஃப்டி 50 0.6% ஏற்றத்தில் தொடங்கி 11,487 ஆகவும் வர்த்தகமாகியுள்ளது. இந்த இரு குறியீடுகளுமே கடந்த வாரத்தில் 3% மேல் ஏற்றம் கண்ட நிலையில், இன்று வாரத்தின் முதல் நாளான இன்றும் நல்ல ஏற்றத்திலே உள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

வாரத்தின் முதல் நாளே தூள் கிளப்பும் சென்செக்ஸ், நிஃப்டி.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

அதோடு அனைத்து துறை சார்ந்த குறியீடுகளுமே சற்று ஏற்றத்தில் தான் தொடங்கியுள்ளது. குறிப்பாக நிஃப்டி ஐடி சார்ந்த குறியீடு 1.3% ஏற்றத்தில் காணப்படுகிறது. இதே போல் நிஃப்டி ஆட்டோ இன்டெக்ஸ் 1.1% ஏற்றத்தில் காணப்படுகிறது. எனினும் மெட்டல் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் குறியீடானது முறையே 0.8% மற்றும் 0.7% என தொடங்கியுள்ளது. இவற்றோடு மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் 0.5% ஏற்றத்திலும் தொடங்கியுள்ளன. என்எஸ்இ குறியீட்டில் 1,146 பங்குகள் ஏற்றத்திலும், 316 பங்குகள் நஷ்டத்திலும் காணப்படுகின்றது.

தற்போது தேசிய பங்கு சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 474 புள்ளிகள் அதிகரித்து, 39,175 ஆக வர்த்தகமாகி வருகின்றது. இதே தேசிய பங்கு நிஃப்டி 131 புள்ளிகள் அதிகரித்து 11,548 ஆகவும் வர்த்தகமாகி வருகின்றது. இதே அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பானது 73.14 ரூபாயாகவும் உள்ளது.

வாரத்தின் முதல் நாளே தூள் கிளப்பும் சென்செக்ஸ், நிஃப்டி.. மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

டாடா கன்சல்டன்ஸி நிறுவனத்தின் பங்கு விலையானது 52 வார உச்சத்தினை தொட்டு, 2,649.95 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் அக்டோபர் 7 அன்று நடைபெறும் நிலையில், அதில் பங்குகளை திரும்ப பெறுதல் பற்றி விவாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு செப்டம்பர் மாதத்தில் முடிவடைந்த இரண்டாவது காலாண்டிற்காக டிவிடெண்டுகள் பற்றியும் விவாதிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது, தொடர்ச்சியாக ஆறாவது நாளாக ஏற்றம் கண்டு வருகிறது.

இதே போல மருந்து நிறுவனமான மெட்ரோபொலிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் இதுவரை இல்லாத அளவு வருவாயினை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. முந்தைய காலண்டை விட நடப்பு காலாண்டில் இரு இலக்க வளர்ச்சியினை எட்டியுள்ளது. இதே முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 25% வளர்ச்சி கண்டுள்ளது. ஆக இப்படியாக பல நேர்மறையான செய்திகள் சந்தையின் ஏற்றத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+