இன்றைய வர்த்தக துவக்கத்தில் அமெரிக்க பங்குச்சந்தையின் கணிசமான உயர்வின் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை லாபம் ஈட்டும் நோக்கில் சந்தையில் இருந்து திரும்ப பெற்றனர். ஆனால் ஐரோப்பி சந்தை மீதான நம்பிக்கையில் சென்செக்ஸ் குறியீடு 4வது நாளாக இன்று செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் வரலாற்று உச்சத்தை எட்டி வருகிறது.
இன்றைய வர்த்தகம் காலையில் உயர்வுடன் துவங்கினாலும் ஒரு மணிநேரத்தில் முதலீட்டளார்கள் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்ய துவங்கிய காரணத்தால், 30 புள்ளிகள் வரையில் சரிந்தது. ஆனால் அடுத்த சில நிமிடத்தில் மீண்டும் புதிய முதலீட்டை பெற்று பெரிய அளவிலான உயர்வு பதிவானது.

இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு இன்று அதிகப்படியாக 65,672.97 புள்ளிகளை எட்டி வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 19,434.15 புள்ளிகளை எட்டியுள்ளது. இந்த நிலையில் மதியம் 2.15 மணிக்கும் சென்செக்ஸ் குறியீடு 240.19 புள்ளிகள் உயர்வுடன் 65,445.24 புள்ளிகளை எட்டியுள்ளது. மேலும் நிஃப்டி குறியீடு 51.25 புள்ளிகள் உயர்ந்து 19,373.80 புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீடுன் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்சர்வ், டெக் மஹிந்திரா, என்டிபிசி, டைட்டன், டிசிஎஸ் ஆகியவை 1 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்வுடன் உள்ளது. நெஸ்லே, ஏசியன் பெயின்ட்ஸ், மாருதி சுசூகி, டாடா ஸ்டீல், அல்ட்ராடெக், இண்டஸ்இந்த், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ், பார்தி ஏர்டெல் ஆகியவை சரிவடைந்துள்ளது.
இந்த நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 274.00 புள்ளிகள் உயர்ந்து 65,479.05 புள்ளிகளை எட்டியுள்ளது. இதன் மூலம் 2வது நாளாக இன்றும் சென்செக்ல் 65000 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்துள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு வர்த்தக முடிவில் 66.45 புள்ளிகள் உயர்ந்து 19,389.00 புள்ளிகளை எட்டியுள்ளது.
இன்றைய வர்த்தக முடிவில் எய்ச்சர் மோட்டார்ஸ், அசோக் லேலாண்டு, எஸ்கார்ட்ஸ் குபோடா, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, மாருதி சுசூகி ஆகிய முன்னணி ஆட்டோமொபைல் பங்குகள் அனைத்தும் சரிந்துள்ளது. மேலும் இன்ரு நைகா-வின் 47.1 லட்சம் பங்குகள் 2 பிளாக் டீல் வாயிலாக கைமாறியுள்ளது. ஆனாலும் நைகா பங்குகள் 1.92 சதவீத சரிவில் 145.25 ரூபாயாக உள்ளது.
ஜப்பான் நாட்டின் பங்குச்சந்தை திங்கட்கிழமை வர்த்தகத்தில் 33 வருட உச்சத்தை தொட்ட நிலையில், இன்று முதலீட்டாளர்கள் லாபம் பார்க்கும் பொருட்டு அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் சரிவுடன் முடிந்தது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications