ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வங்கி நிறுவனப் பங்குகளின் எழுச்சியினால் இந்திய பங்கு சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ், நிப்டி இரண்டும் புதிய சாதனைப் படைத்துள்ளன.
உள்ளூர் பங்கு சந்தை முதலீடுகள் அதிகரித்ததன் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்தும், ஈரான் மீதான பொருளாதாரத் தடையால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் போன்ற காரணங்களும் பங்கு சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன.
சந்தை நிலவரம்
சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 221.76 புள்ளிகள் என 0.59 சதவீதம் உயர்ந்து 37,887.56 புள்ளிகளாகவும், தேசிய சந்தை குறியீடான நிப்டி 60.55 புள்ளிகள் என 0.53 சதவீதம் உயர்ந்து 11,450.00 புள்ளிகளாகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
துறை வாரியான நிலவரம்
மும்பை பங்கு சந்தையினைப் பொறுத்தவரையில் எனர்ஜி, நுகர்வோர் சாதனங்கள், டெலிகாம், வங்கி, எண்ணெய் மற்றும் எரிவாயு, மற்றும் தொழிற்சாலை துறை பங்குகள் லாபம் அளித்தன. அதே நேரம் ஆட்டோமொபைல், பவர், ஐடி மற்றும் பார்மா துறை பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.
லாபம் ஈட்டிய பங்குகள்
ஓஎன்ஜிசி, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ, இந்துஸ்தான் யூனிலீவர், டாடா மோட்டார்ஸ் பங்குகள் லாபம் அளித்துள்ளன.
நட்டம் அளித்த பங்குகள்
மாருதி, பஜாஜ் ஆட்டோ, வேதாந்தா, இன்போசிஸ், எண்டிபிசி, ஐடிசி பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளன.


Click it and Unblock the Notifications