தேர்தல் உச்சத்தில் இருந்து 2,277 புள்ளிகள் இறக்கம் கண்ட Sensex!பாதாளத்தில் விழுந்த Nifty!

மும்பை: மே 16, 2019 அன்று சென்செக்ஸ் 37,179 புள்ளிகளில் சந்தை வர்த்தகமாகத் தொடங்கியது. மோடி இந்த தேர்தலிலும் வென்று தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் வெளியானதால் அடுத்த இரண்டு வர்த்தக நாட்களில் 39,352 என்கிற உச்சத்தில் வர்த்தகமாகத் தொடங்கியது.

மே 23 தேர்தல் முடிவுகள் அன்று காலை 39,591-க்கு வர்த்தகமாகத் தொடங்கி 40,124 என்கிற புதிய உச்சப் புள்ளியைத் தொட்டு வர்த்தகமானது சென்செக்ஸ். மீண்டும் கரடியின் பிடியில் சிக்கி தற்போது 37,847 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது. ஆக சுமார் 2,277 புள்ளிகள் இறக்கத்தில் வர்த்தகமாகி வருகின்றன. அதே போல நிஃப்டியும் தன் தேர்தல் நாள் (மே 23, 2019) உச்சமான 11,901 புள்ளிகளில் இருந்து, 630 புள்ளிகள் சரிந்து இன்று 11,271 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்திருக்கிறது.

தேர்தல் உச்சத்தில் இருந்து 2,277 புள்ளிகள் இறக்கம் கண்ட Sensex!பாதாளத்தில் விழுந்த Nifty!

அதோடு சென்செக்ஸ் தன் 38,000 என்கிற வலுவான சப்போர்ட் புள்ளியையும், நிஃப்டி தன் 11,300 என்கிற வலுவான சப்போர்ட் புள்ளியையும் விட்டு இறங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று காலை சென்செக்ஸ் 37,990 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி இறக்கம் கண்டு 37,847 புள்ளிகளில் நிறைவடைந்திருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட 135 புள்ளிகள் கூடுதல் இறக்கம். அதே போல் நிஃப்டி50 இண்டெக்ஸ் காலை 11,322 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,271 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 59 புள்ளிகள் கூடுதலாக சரிந்திருக்கிறது.

இன்று சென்செக்ஸில் வர்த்தகமான 30 பங்குகளில் 24 பங்குகள் இறக்கத்திலும், 06 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. இன்று நிஃப்டியில் வர்த்தகமான 50 பங்குகளில் 38 பங்குகள் இறக்கத்திலும், 12 பங்குகள் ஏற்றத்திலும் வர்த்தகமாயின. பி.எஸ்.இ-யில் 2,609 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 831 பங்குகள் ஏற்றத்திலும், 1,627 பங்குகள் இறக்கத்திலும், 151 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. மொத்தம் 2,609 பங்குகளில் 28 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 410 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.

இன்று நிஃப்டியில் இண்டெக்ஸ்களில் FMCG, மீடியா தவிர மற்ற அனைத்து துறை சார் பங்குகளும் இறக்கத்தில் வர்த்தகமாயின. இன்று வர்த்தக நேரத்தில் ஏஷியன் பெயிண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, யெஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் போன்ற பங்குகள் அதிக வால்யூம்களில் வர்த்தகமாயின. ஜி எண்டர்டெயின்மெண்ட், ஏஷியல் பெயிண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, ஹெச் யூ எல், ஹெச் சி எல் டெக் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. அதானி போர்ட்ஸ், இந்தியா புல்ஸ் ஹவுசிங், யூபிஎல், ஈஷர் மோட்டார்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற நிறுவனப் பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+