மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் முதல் முறையாக 32,000 புள்ளிகளைத் தொட்டுச் சாதனைப் படைத்துள்ளது. அதே நேரம் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டியும் 9,884 புள்ளிகளை முதன் முறையாகத் தொட்டுள்ளது.
அமெரிக்கச் சந்தை உயர்வு, ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் குறைக்க வாய்ப்பு மற்றும் ஜூன் காலாண்டு பிளாட்டாக முடிந்தது ஆகிய காரணங்களால் தலால் ஸ்டீரிட் மூர்க்கத்தனமான உயர்வை இன்று அடைந்துள்ளது.
காலை நேர நிலவரம்
காலை 11:23 மணி நேர நிலவரத்தின் படி சென்செக்ஸ் 229.38 புள்ளிகள் அதாவது 0.72 சதவீதம் உயர்ந்து 32,034.24 புள்ளிகளுடனும், நிப்டி 62.25 புள்ளிகள் அதாவது 0.63 சதவீதம் உயர்ந்து 9,878.30 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்று வருகின்றது.
உயர்வை அளித்த துறைகள்
மும்பை பங்கு சந்தையினைப் பொருத்த வரையில் ரியல் எஸ்டேட் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் 1.5 சதவீதமும், நுகர்வோர் பொருட்கள் துறை சார்ந்த பங்குகள் 1.25 சதவீதமும், கேப்பிட்டல் கூட்ஸ் சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் 1.14 சதவீதமும், பவர் நிறுவனங்களின் பங்குகள் 0.87 சதவீதமும் உயர்வைச் சந்தித்துள்ளன.
டாப் 5 லாபம் அளித்த பங்குகள்
ஐசிசிஐ வங்கி (+ 1.45%), எல் அண்ட் டி (+ 1.27%), ஆக்சிஸ் வங்கி (+ 1.24%) மற்றும் பார்தி ஏர்டெல் (+ 1.07%)
டாப் 5 நட்டம் அளித்த பங்குகள்
டாடா மோட்டார்ஸ் (-0.29%), எம் & எம் (-0.12%) மற்றும் பஜாஜ் ஆட்டோ (-0.11%).


Click it and Unblock the Notifications
